Thursday, January 23 2025 | 10:45:27 PM
Breaking News

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

Connect us on:

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேற்று (2025 ஜனவரி 13 -திங்கட்கிழமை) ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடை துறையில் தொடர்ச்சியான பயனுள்ள முக்கிய முன்முயற்சிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பிராந்தியத்தில் முக்கியமான ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு  பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மத்திய  கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய கால்நடை, பால்வளத் துறை இணையமைச்சர்கள் திரு எஸ்.பி.சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் ஒடிசா முதலமைச்சர் திரு. மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் மயூர்பஞ்சில் கால்நடை திட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். நிகழ்வின் ஒரு பகுதியாக, பரிசு பால் திட்டமும் தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த முயற்சியை காணொலி முறையில் தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றில் இதுபோன்ற திட்டங்களின் நேர்மறையான தாக்கத்தை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற முயற்சிகள் நாடு முழுவதும்  முன்மாதிரியாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொலைநோக்குக் கொள்கைகள், புதுமையான நடைமுறைகள் மூலம் பால்வளத் துறையைச் சிறப்பாக மாற்றியமைப்பதில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையின் முயற்சிகளை அவர் பாராட்டினார். பால் உற்பத்தியில் இந்தியாவின் தலைமையை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு எடுத்துரைத்தார்.

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், உள்நாட்டு மாட்டினங்களின் இன மேம்பாட்டையும் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள தேசிய கால்நடை இயக்கத்தின் வெற்றியை எடுத்துரைத்தார்.

ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, நிலையான கிராமப்புற வாழ்வாதாரத்தை வளர்ப்பதில் கால்நடைகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.  விவசாயிகளை மையமாகக் கொண்ட திட்டங்கள் மூலம் பால், கால்நடை துறைகளை முன்னேற்றுவதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை அவர் விளக்கினார்.

About Matribhumi Samachar

Check Also

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற …