திருவையாறில் நடைபெற்ற 178வது தியாகராஜர் ஆராதனை விழாவின் தொடக்க நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகராஜ ஸ்வாமிகள் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் முக்கிய பிரமுகர்களின் படங்களைக் கொண்ட “எந்தரோ மகானுபாவுலு” என்ற தலைப்பில் ஒரு அஞ்சல்தலை தொகுப்பை திருச்சிராப்பள்ளி மத்திய அஞ்சல் மண்டல தலைவர் திருமதி தி. நிர்மலா தேவி அவர்களால் வெளியிடப்பட. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்ரீ தியாகரபிரம்ம மஹோத்சவ சபையின் தலைவர் திரு. ஜி.கே. வாசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்த தொகுப்பில் 23 பட அஞ்சல் அட்டைகள் உள்ளது. ஒவ்வொரு அஞ்சல் அட்டையிலும் இசை மேதைகள் புனித தியாகராஜரிடம் கொண்டுள்ள தூய பக்தியை சித்தரிக்கும் புகைப்படங்கள் உள்ளன. இந்த அஞ்சல் அட்டை தொகுப்பு சமத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் இசை தான் உச்சத்தை அடையும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது என்ற செய்தியைப் பரப்புகிறது.
இந்த அஞ்சல் அட்டை தொகுப்பை வெளியிடுவதற்கு புகைப்படங்கள் பகிர்ந்து உதவிய ஸ்ரீ தியாகரபிரம்ம மஹோத்சவ சபாவிற்கு மத்திய அஞ்சல் மண்டலம் நன்றியை தெரிவிக்கிறது. இந்த அஞ்சல் அட்டை தொகுப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் உள்ள தற்காலிக அஞ்சலகத்தில் விற்பனைக்கு உள்ளது. ஆர்வமுள்ள அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு நிலையத்தை தொடர்பு கொண்டும் இந்த தொகுப்பை வாங்கலாம்.