Monday, December 08 2025 | 12:01:19 AM
Breaking News

2025 ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

Connect us on:

அகில இந்திய மொத்த விலை குறியீட்டு  எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்க விகிதம் 2025-ம் ஆண்டு ஜூன்  மாதத்திற்கு (2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது) (-) 0.13%-ஆக (தற்காலிகமானது) உள்ளது. 2025 ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பணவீக்க விகிதம் எதிர்மறையாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம்  முதன்மையாக உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் உற்பத்தி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக ஏற்பட்டதாகும். அனைத்து பொருட்கள் மற்றும் மொத்த விலைக் குறியீடு தொடர்பான அம்சங்களின் கடந்த மூன்று மாதங்களுக்கான குறியீட்டு எண்கள் மற்றும் பணவீக்க விகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

குறியீட்டு எண்கள் மற்றும் ஆண்டுப் பணவீக்க விகிதம் (வருடாந்திர சதவீதத்தில்) *

குறியீட்டு எண்கள் மற்றும் ஆண்டுப் பணவீக்க விகிதம் (வருடாந்திர சதவீதத்தில்) *

அனைத்து பொருட்கள் / முக்கிய குழுக்கள்

  எடை (%)  ஏப்ரல்-25
(
இறுதி)
மே-25 (தற்காலிகம்) ஜூன் -25 (தற்காலிகம்
குறியீடு பண

வீக்கம்

குறியீடு பண

வீக்கம்

குறியீடு பண

வீக்கம்

அனைத்துப் பொருட்கள் 100 154.2 0.85 154.1 0.39 153.8 -0.13
I. முதன்மைப் பொருட்கள் / சரக்குகள் 22.62 185.4 -0.91 184.3 -2.02 185.8 -3.38
II. எரிபொருள் & மின்சாரம் 13.15 145.7 -3.76 146.7 -2.27 143.0 -2.65
III. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் 64.23 144.9 2.62 144.9 2.04 144.8 1.97
உணவு குறியீடு 24.38 190.7 3.30 189.5 1.72 190.2 -0.26

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.