தில்லி தேசிய தலைநகரப் பகுதியிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் 19 குழுவினர் 12.12.2025 அன்று சாலைகளை ஆய்வு செய்தனர். தில்லி முழுவதும் தில்லி மேம்பாட்டு ஆணையம் எனப்படும் டிடிஏ-வின் அதிகார வரம்பிற்குள் வரும் 136 சாலைப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை, ஆணையத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு, அமலாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குளிர் காலத்தில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் அமலில் உள்ள சூழலில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு, சாலைகளில் உருவாகும் தூசி, மாநகராட்சி திடக்கழிவுகள், கட்டுமான கழிவுகள் போன்றவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில், 15 சாலைப் பகுதிகளில் அதிக அளவில் தெரியும் தூசி ஏற்படுவதும், 38 இடங்களில் மிதமான தூசி ஏற்படுவதும், 61 இடங்களில் குறைந்த தூசி ஏற்படுவதும், 22 இடங்களில் எந்தத் தூசியும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.
சில சாலைப் பகுதிகளின் பராமரிப்பில் குறைபாடு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்தது. சாலைகளை முறையாக பராமரித்து தூசி குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Matribhumi Samachar Tamil

