சர்தார் வல்லபாய் படேலின் 75-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் இன்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், நாட்டின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை பெருமளவு வலுப்படுத்தியதுடன் அகில இந்திய சேவைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பெரும் பங்களிப்புக் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
பன்மையான மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய பன்முகத்தன்மையால் குறிப்பிடப்படும் ஒரு நாட்டை ஒருங்கிணைக்கும் மகத்தான சவாலை சர்தார் படேலின் தலைமைத்துவம் வெற்றிகரமாக எதிர்கொண்டது என்றும், இச் சாதனை நிகரற்றதாகவும், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நடைபெற்ற ஒப்பிடக்கூடிய முயற்சிகளை விடவும் மிக மேலானதாகவும் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு சர்தார் படேலின் நீடித்த மரபு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பயணத்தில் நாட்டிற்கு வழிகாட்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Matribhumi Samachar Tamil

