புதுதில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“புதுதில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.”
Matribhumi Samachar Tamil

