Wednesday, December 10 2025 | 06:22:07 AM
Breaking News

புதிய சஞ்சார் சாத்தி மொபைல் செயலி உட்பட குடிமக்களை மையமாகக் கொண்ட தொலைத்தொடர்பு வசதிகளை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்

Connect us on:

நாடு முழுவதும் தொலைத் தொடர்பு அணுகல், பாதுகாப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா இன்று (17.01.2025) குடிமக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி, தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம்  2.0,   டிபிஎன் நிதியுதவி பெறும் 4ஜி மொபைல் தளங்களில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதியின் தொடக்கம் ஆகியவை இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களாகும்.

சஞ்சார் சாத்தி மொபைல் செயலி என்பது தொலைத்தொடர்பு பாதுகாப்பை வலுப்படுத்தவும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கவும் வடிவமைக்கப்பட்ட பயனர் நட்பு தளமாகும். “இந்த முயற்சி வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குவதோடு, அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான சூழலையும் உறுதி செய்கிறது” என்று மொபைல் செயலியை அறிமுகப்படுத்தும் போது அமைச்சர் தெரிவித்தார். அனைவருக்கும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை பராமரிக்க சஞ்சார் சாத்தி செயலி உதவும் என்று அவர் கூறினார்.

நாட்டில் 90 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் போன் பயனர்கள் இந்த சஞ்சார் சாத்தி மொபைல் செயலி மூலம்  தங்கள் ஸ்மார்ட்போனில் இந்த முக்கிய சேவைகளைப் பெறலாம்.

தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0-ன் தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா  அதனை தொடங்கியும் வைத்தார். இதன் கீழ் ஏறத்தாழ 8 லட்சம் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். “அகண்ட அலைவரிசை சந்தா 66 கோடியிலிருந்து 94 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0-ஐ அறிமுகம் செய்வதற்கான அடித்தளமாகவும், அடிப்படையாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் எஞ்சியுள்ள 1.7 லட்சம் கிராமங்களை இணைப்பதும், இவக்கு மைல்கற்களை அடைவதும் தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0-ன் முதன்மை நோக்கங்கள் என்று அவர் தெரிவித்தார். “ஒவ்வொரு 100 கிராமப்புற குடும்பங்களில் குறைந்தது 60 பேருக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். கூடுதலாக, கிராமப்புற இந்தியாவிற்கான வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கி, குறைந்தபட்சம் அகண்ட அலைவரிசை பதிவிறக்க வேகத்தை விநாடிக்கு 100 மெகா பைட்ஸ் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0 இந்தியாவை டிஜிட்டல் மாற்றத்தின் புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அனைவருக்கும் அதிவேக அகண்ட அலைவரிசை மற்றும் அர்த்தமுள்ள இணைப்பை வழங்குவதன் மூலம் இந்தியாவை உலகளாவிய அறிவுசார் சமூகமாக மாற்றுவது இதன் நோக்கமாகும். தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் (2019-2024)1.0-ன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படும் தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0-ன் முக்கிய நன்மைகள் பின்வருமாறு:

2030-ம் ஆண்டுக்குள் 2.70 லட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை வடங்களின் இணைப்பை 95% இயக்க நேரத்துடன் விரிவுபடுத்துதல்.

2030-க்குள் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள் போன்ற 90% நிறுவனங்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குதல்.

நிலையான அகண்ட அலைவரிசை பதிவிறக்க வேகத்தை மேம்படுத்தவும்- தேசிய சராசரி நவம்பர் 2024-ல் விநாடிக்கு 63.55 மெகா பைட்ஸ் என்பதிலிருந்து 2030-க்குள் குறைந்தபட்சம் விநாடிக்கு 100 மெகா பைட்ஸ் ஆக உயர்த்துதல்.

2026-ம் ஆண்டுக்குள் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான ஃபைபர் நெட்வொர்க்குகளை பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட தளத்தின் மூலம் 100% மேப்பிங் செய்தல்.

எளிதாக வர்த்தகம் செய்வதற்கு – 2030-ம் ஆண்டுக்குள் உரிமை விண்ணப்ப பயன்பாட்டின் சராசரி அகற்றல் நேரத்தை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைத்தல். 2019-ல் இது 449 நாட்களாக இருந்தது.

2030-ம் ஆண்டுக்குள் 100 மக்களுக்கு  கிராமப்புற இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கையை தற்போதைய 45 என்பதிலிருந்து 60 ஆக உயர்த்துதல்.

About Matribhumi Samachar

Check Also

காசநோய் ஒழிப்பு திட்டத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் காசநோயை முற்றிலும் அகற்றுவதற்கான தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. …