Saturday, January 03 2026 | 03:44:47 AM
Breaking News

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு

Connect us on:

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 682.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என  மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜனவரி 2023-24-ல் 636.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 7.21% வளர்ச்சியாகும்.

இந்தக் காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஏப்ரல்-ஜனவரி 2023-24 காலகட்டத்தில் 353.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 1.39% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பெட்ரோலியம் அல்லாத பிற ஏற்றுமதிகள் ஏப்ரல் -ஜனவரி 2023-24ல் 283.45பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது ஏப்ரல்-ஜனவரி 2024-25-ல்  305.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 2025-ல் மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்துகள், அரிசி, ரத்தினங்கள், நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து காணப்பட்டது.

மின்னணு பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.29 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 78.97% அதிகரித்து 2025 ஜனவரியில் 4.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல்  8.77 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 7.44% அதிகரித்து 2025 ஜனவரியில் 9.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

மருந்துகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.13 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 21.46% அதிகரித்து 2025 ஜனவரியில் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

அரிசி ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 0.95 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 44.61% அதிகரித்து 2025 ஜனவரியில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

ரத்தினங்கள், நகைகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 15.95% அதிகரித்து 2025 ஜனவரியில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

2025 ஜனவரி மாத்திற்கான மொத்த ஏற்றுமதி (வர்த்தகம், சேவைகள் இணைந்து) 74.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என  மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஜனவரி மாதத்துடன்  ஒப்பிடும்போது 9.72 சதவீத வளர்ச்சியாகும்.

About Matribhumi Samachar

Check Also

நாடு தழுவிய வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை: அனைத்து வட்டங்களிலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது

இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்,  நாடு தழுவிய அளவில் வைஃபை  அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை …