Monday, January 26 2026 | 04:04:27 AM
Breaking News

உலகளாவிய நல்வாழ்வு நடவடிக்கைகளில் யோகாவை முன்னிலைப்படுத்துகிறது இந்தியா: ஆயுஷ் துறைச் செயலாளர்

Connect us on:

சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் 2025 ஜூன் 17, அன்று உலகளாவிய திட்டமான யோகா பந்தனின் தொடக்க நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. சர்வதேச யோகா தினம் 2025-ன் கீழ் 10 குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த முயற்சி, யோகா துறையில் நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.

‘யோகா பந்தன்’ உலகெங்கிலும் உள்ள உலகளாவிய யோகா தூதர்களை ஒன்றிணைத்து, கலாச்சார பரிமாற்றம், கல்வி உரையாடல் மற்றும் யோகா மூலம் உலகளாவிய நல்வாழ்வுக்கான பகிரப்பட்ட நடவடிக்கைக்கான தளமாக செயல்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யோகா கல்வியாளர்கள், பயிற்சியாளர்கள், ஸ்டுடியோ நிறுவனர்கள், ஆசிரியர்கள் மற்றும் 15 நாடுகளை சேர்ந்த நல்வாழ்வு நிபுணர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேச பிரதிநிதிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

இதன் தொடக்க அமர்வில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடேச்சா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலகளாவிய நல்வாழ்வு நடவடிக்கைகளில் யோகாவை முன்னணிப்படுத்துவதில் இந்தியாவின் தொலைநோக்குத் தலைமையை எடுத்துரைத்தார். தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் தரவு குறித்து  குறிப்பிட்ட அவர், இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களில் சுமார் 95 சதவீதம் பேர் ஆயுஷ் முறைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றும், சுமார் 35 சதவீதம் பேர்  ஏதேனும் ஒரு வகையான யோகாவை தீவிரமாகப் பயிற்சி செய்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளவில் 3.3 லட்சத்திற்கும் அதிகமான யோகா நிகழ்வுகள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும், ஜூன் 21 ம் தேதி சர்வதேச யோகா தினம் 2025-ன் முக்கிய நிகழ்வு நடைபெறும் தருணத்தில் இந்த எண்ணிக்கை 5 லட்சமாக உயரக்கூடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …