Wednesday, December 24 2025 | 06:42:20 AM
Breaking News

அணுசக்தியின் உள்ளடக்கம்

Connect us on:

நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுசக்திக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. நாட்டில் வரையறுக்கப்பட்ட யுரேனிய வளங்களையும், அதிக தோரியம் வளங்களையும் சரியான முறையில் பயன்படுத்தும் நோக்கில், அணுசக்தி உற்பத்தி மற்றும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை அடைவதற்காக, அணுசக்தித் துறை, செலவழித்த அணு எரிபொருளின் மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்ட மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக செயல்படுத்தப்படவுள்ள மூன்று கட்ட அணுசக்தித் திட்டம், உலைகளில் (முதல் நிலை) இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டில் கிடைக்கும் பிளக்கத்தகு வளங்களைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து,  இரண்டாம் கட்டத்தில், விரைவு ஈனுலைகளில் உலைகளின் செலவழித்த எரிபொருளிலிருந்து பெறப்பட்ட புளூட்டோனியம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் போதுமான அணுசக்தி நிறுவப்பட்ட திறன் கட்டமைக்கப்பட்டவுடன், விரைவு ஈனுலைகளில் பெருகும்  யுரேனியம்-233 ஐப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து அதிக அளவிலான தோரியம் பயன்படுத்தப்படும்.

இதையடுத்து, இந்திய அணுசக்தி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், நடைமுறையில் தீர்ந்து போகாத எரிசக்தி ஆதாரமாக தோரியத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் அடையப்படலாம். உள்நாட்டு உலைகளை உள்ளடக்கிய அணுசக்தித் திட்டத்தின் முதல் கட்டம், தொழில்துறை களத்தில் உள்ளது. இரண்டாவது  கட்டத்தின் கீழ் ஒரு மாதிரி விரைவு ஈனுலை,  தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட்-பாவினி (BHAVINI) மூலம் இயக்கப்படுகிறது.

அணுசக்தி என்பது 24 மணி நேரமும் கிடைக்கும் மின்சாரத்தின் சுத்தமான, அடிப்படை ஆதாரமாகும். அணுசக்தியின் சுழற்சி உமிழ்வுகள், நீர் மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளின் உமிழ்வுகளுடன் ஒப்பிடத்தக்கவை. இதனால், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில், அணுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

About Matribhumi Samachar

Check Also

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகள் அவசியம்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகளின் அவசியத்தை, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாநில பொதுப்பணி ஆணையகங்கள்  தலைவர்களின் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். நாட்டைக் கட்டமைப்பதில் பொதுப்பணி ஆணையங்களின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அதிகாரிகளின் தகுதிகள் நிலைநிறுத்தப்படுவது மட்டுமின்றி, அது குறித்து வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நிர்வாக அமைப்புகளின் தரம், நேர்மை, செயல்திறனை வடிவமைப்பதில் பொதுப் பணி ஆணையங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். நாட்டிற்காக சேவையாற்றுவதற்கு திறமையான, பாரபட்சமற்ற மற்றும் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றும் தனிநபர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ள அரசியல் சாசன  நிறுவனங்களாக பொதுப் பணி ஆணையகங்கள் திகழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குடிமைப் பணிகளின் மீதான மாறிவரும் தேவைகளை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் நிர்வாகம், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், பொருளாதார மாற்றம் போன்ற தேசிய நலன் சார்ந்து நடவடிக்கைகளுக்கு அரசு அளித்து வரும் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது,தேர்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணி அலுவலர்களின் தரத்தைப் பொறுத்தது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.