Monday, December 08 2025 | 06:54:30 AM
Breaking News

மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றம் 2025-ல் பங்கேற்க உள்ளார்

Connect us on:

டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2025-ல் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்க உள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, உள்ளடக்கிய வளர்ச்சி, மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவரது பயணம் எடுத்துக்காட்டுகிறது.

உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் மாதிரி

டாவோஸுக்குப் புறப்படுவதற்கு முன்பு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக வரலாற்று ரீதியாக முன்னேற்றத்திலிருந்து விடுபட்ட நாடுகளுக்கு வளர்ச்சியை உறுதி செய்வதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை திரு வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

“பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளார். இது அடிமட்டத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. வங்கிக் கணக்குகள் மூலம் நிதி உள்ளடக்கம் தொடங்கி கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், குழாய் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் வரை சிறப்பாக இந்த அரசு செயல்படுகிறது. கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. இவை அனைத்துமே உலகுக்கு முன்மாதிரியானவை” என்று திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக மேம்பாடு, டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு, தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவது போன்றவை குறித்து உலகப் பொருளாதார மன்றத்தில் விரிவான விவாதம் நடைபெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டம், 2025 ஜனவரி 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

 

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.