Sunday, December 21 2025 | 11:09:16 AM
Breaking News

நாட்டில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Connect us on:

இந்தியாவில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை  2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் உள்ளன  என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை, தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து பாட்னாவில் ஏற்பாடு செய்திருந்த “வளர்ச்சியடைந்த பீகார்: பெண்கள் பங்கேற்பின் மூலம் ஒரு வளர்ந்த பீகாரை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதை, அதிகாரம் பெற்ற பெண்களாலும் இளைஞர்களாலும் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது நிர்வாகக் கட்டமைப்பை ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய நான்கு தூண்களை மையமாகச் சுற்றி அமைத்துள்ளது என்றும், பெண்கள் தொடர்ந்து முன்னணி இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெண்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தை மறுவடிவமைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

பெண்கள் முதல் முறையாக சைனிக் பள்ளிகளிலும் மதிப்புமிக்க தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் அனுமதிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.  அறிவியல், தொழில்நுட்ப துறையில் அதிகாரமளித்தல், பொருளாதார – சமூக அதிகாரமளித்தல் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெண்களுக்காக 48 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். முத்ரா திட்ட பயனாளிகளில் 60 சதவீதத்து க்கும் மேற்பட்டோர் பெண் தொழில்முனைவோர் என அவர் குறிப்பிட்டார்.  சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடிக்கும் மேற்பட்ட லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவது கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றி  வருகிறது என அவர் கூறினார்.

“இந்த அமைதியான புரட்சி இந்தியாவின் எதிர்காலத்தை மீண்டும் எழுதுகிறது, இதற்கு முதல் தலைமுறை பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தலைமை தாங்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

தேசிய மனநிலையில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அது பெண்களின் பங்கேற்பைப் பற்றியது அல்ல எனவும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைப் பற்றியது என்றும் அவர் தெரிவித்தார்.   பெண்கள் முன்னணியில் இருக்கும்போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு நனவாகும் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், பீகார் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷ்ரவன் குமார் உள்ளிட்டோரும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவை எடுத்துரைக்கும் வகையிலான கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்

வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் மேம்பாட்டிற்கான திட்டமிடல் பணிகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல், நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார வசதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அந்தக் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு அளிப்பதிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அந்தக் கட்டுரை விளக்குகிறது. சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் எழுதிய கட்டுரைக்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது; “அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு @ChouhanShivraj, வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் திட்டமிடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றை  சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில், வாழ்வாதார வசதிகளில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது குறித்து விரிவாக விளக்கியுள்ளார். இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.”