Sunday, January 25 2026 | 12:46:35 AM
Breaking News

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த, ரூ.127 கோடிக்கு மேல் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது

Connect us on:

2025-26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்தத் தொகை, 2025-26-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக் குழுவின் கீழ் வழங்கப்படும்  மானியங்களின் இரண்டாவது தவணையாகும். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ள மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் 9 மாவட்ட பஞ்சாயத்துகள், 74 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 2,901 கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த மானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின்  பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் மூலம், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கான 15-வது நிதிக் குழு மானியங்களை மாநிலங்களுக்கு விடுவிக்க அரசு பரிந்துரைக்கிறது, பின்னர் அவை நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட மானியங்கள் ஒரு நிதியாண்டில் 2 தவணைகளாகப் பரிந்துரைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனையில்லாத  மானியங்கள், ஊதியங்கள் மற்றும் பிற செலவுகளைத் தவிர, அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது துறைகளின் கீழ், அந்தந்தப் பகுதிக்குத் தேவையான தேவைகளுக்காக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும். இந்த நிதியை, சுகாதாரம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற அடிப்படை சேவைகளுக்காகப் பயன்படுத்தலாம்.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …