Saturday, December 06 2025 | 07:06:57 AM
Breaking News

சென்னை ஐஐடி, ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’யின் கீழ் ஐந்து தேசியத் தடகள வீரர்-வீராங்கனைகளைச் சேர்த்துள்ளது

Connect us on:

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’ பிரிவின் கீழ் தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும்.

நாட்டிலேயே முதன்முறையாக  விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப் படிப்புகளில் அறிமுகப்படுத்திய பெருமை சென்னை ஐஐடி-க்கு உண்டு. விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். தகுதியான மாணவர்கள் தங்கள் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கும் அதேவேளையில் உயர்கல்வியைத் தொடர இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

தேசிய அளவில் சாதனை படைத்து இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஐந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை என்பது இளம்குழந்தைகளை சிறு வயதிலேயே  விளையாட ஊக்குவித்தல் அவசியம் என்ற முக்கிய செய்தியைத் தெரிவிக்கும் ஐஐடி மெட்ராஸின் முன்முயற்சியாகும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரையும் இது சென்றடையும் என நான் மனதார நம்புகிறேன்” என்றும்  தெரிவித்தார்.

2024-25-ம் கல்வியாண்டில் ‘விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சேர்க்கை’ பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஐந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள்:

  1. மகாராஷ்டிராவைச் சேர்ந்த செல்வி அரோஹி பாவே (கைப்பந்து வீராங்கனை) – பி.எஸ் (மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்
  2. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரு ஆர்யமான் மண்டல் (வாட்டர் போலோ-நீச்சல் வீரர்) – பி.டெக் (கணினி அறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்
  3. தில்லியைச் சேர்ந்த செல்வி நந்தினி ஜெயின் (ஸ்குவாஷ் வீராங்கனை) – பி.டெக் (கணினி அறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்
  4. தில்லியைச் சேர்ந்த திரு பிரபாவ் குப்தா (டேபிள் டென்னிஸ் வீரர்) – பி.டெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்
  5. ஆந்திராவைச் சேர்ந்த திரு வங்கலா வேதவச்சன் ரெட்டி (டென்னிஸ் வீரர்) – பி.டெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்.

About Matribhumi Samachar

Check Also

நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி நெட்வொர்க்குகள் தொடங்கப்பட்டுள்ளன.  தற்போது, நாட்டின் 99.9 சதவீத மாவட்டங்களில் 5ஜி …