Wednesday, December 10 2025 | 08:47:32 AM
Breaking News

98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை தில்லியில் பிரதமர் நாளை தொடங்கிவைக்கிறார்

Connect us on:

அண்மையில் மராத்திய மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட உள்ள 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாட்டை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை  (21-ம் தேதி) பிற்பகல் நான்கரை மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இரண்டு நாட்கள் நடைபெறும இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்களும் புத்தகக் கண்காட்சியும், கலாச்சார நிகழ்ச்சிகளும் கலந்துரையாடல்களும், நடைபெற உள்ளன. இதில் இலக்கியத்துறையில் பிரபலமானவர்கள், பங்கேற்க உள்ளனர். காலத்தைக் கடந்து நிற்கும் மராத்திய இலக்கியத்தின் சிறப்புகள் குறித்துக் கொண்டாடும் வகையிலும் மொழிப் பாதுகாப்பு, மொழி பெயர்ப்பு மற்றும் இலக்கியப் பணிகளை டிஜிட்டல் மயமாக்குவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விரிவான விவாதங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

71 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் மராத்திய இலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், புனேயிலிருந்து தில்லி வரை இலக்கிய ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. மராத்திய இலக்கியத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் 1,200  பேர் பயணம் செய்ய உள்ளனர். இந்த மாநாட்டில் 2,600-க்கும் மேற்பட்ட மராத்தியப் பாடல்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 50 புத்தகங்கள் வெளியிட உள்ளன.  100 புத்தக அரங்குகள் இடம் பெறுகின்றன. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து இலக்கிய சான்றோர்கள், பாடலாசிரியர்கள், மொழி சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.