Wednesday, December 24 2025 | 03:09:10 AM
Breaking News

பொதுமக்களுக்கு மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை அணுகக்கூடிய வகையில் மலிவுக் கட்டணத்திலும் வழங்க மத்திய அரசு திட்டம்

Connect us on:

அணுசக்தித் துறையின் கீழ் உள்ள டாடா நினைவு மருத்துவமனை (டிஎம்சி), விரிவான சான்றுகள் அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையை வழங்கி வருகிறது. மும்பை, வாரணாசி, விசாகப்பட்டினம், சங்ரூர், முல்லன்பூர், குவஹாத்தி மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் 7 மாநிலங்களில் டிஎம்சி 11 மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. 11 மருத்துவமனைகளில், 8 செயல்பாட்டுக்கு வந்துள்ளன, 3 மருத்துவமனைகள் கட்டுமானத்தில் உள்ளன. டாடா நினைவு மையம் (டிஎம்சி) நாட்டின் முதன்மையான புற்றுநோய் மையமாக இருப்பதால், புற்றுநோய் பராமரிப்புக்கான தேசிய/சர்வதேச கொள்கை மற்றும் உத்தியை வழிநடத்துவதில் தலைமைத்துவத்தை வழங்குகிறது-

புற்றுநோய்க்கான ஆதாரங்கள் சார்ந்த நடைமுறை மூலம் சிறந்த சேவைகளை ஊக்குவித்தல்:

மாணவர்கள், பயிற்சி பெறுபவர்கள், தொழில் வல்லுநர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த கல்வியை வழங்குவதில் அர்ப்பணிப்பு

மலிவு விலையில், புதுமையான மற்றும் நாட்டின் தேவைகளுக்கு பொருத்தமான ஆராய்ச்சியை வலியுறுத்துதல்.

சிக்கலான புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் டிஎம்சி-யின் சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களின் நீண்ட பட்டியல் உள்ளது.

தேசிய புற்றுநோய் இணைப்புத் திட்டம் வாயிலாக நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளை மேலும் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் மாற்றுவதற்கான ஒரு உத்தியை டிஎம்சி தொடங்க திட்டமிட்டுள்ளது. தற்போது 382 உறுப்பினர்கள்/நிறுவனங்கள் தேசிய புற்றுநோய் இணைப்புத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 8,50,000 புதிய புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. நாட்டில் ஏராளமான பொதுமக்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் மிகப்பெரிய மற்றும் தொலைநோக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் டி.எம்.சி அதன் மைய மற்றும் பரவலான மாதிரியின் கீழ் மருத்துவமனை வலைப் பின்னலை படிப்படியாக விரிவுபடுத்தும்.

இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு அணு மின் நிலையங்களிலும் கதிர்வீச்சுக்கு அருகில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சுகாதார மதிப்பீட்டிற்கான தொற்றுநோயியல் ஆய்வுகள், நாட்டின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மையமான மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்துடன் (டி.எம்.சி) இணைந்து புகழ்பெற்ற உள்ளூர் மருத்துவக் கல்லூரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக, தொழில்சார் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து நோய்களின் பாதிப்பும் தேசிய சராசரியை விடக் குறைவாக இருப்பதை இந்த ஆய்வுகள்/பரிசோதனைகள் கண்டறிந்துள்ளன. தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் புற்றுநோய் பாதிப்பு தன்மை, பிறவி  குறைபாடுகள் ஆகியவற்றில் எந்த அதிகரிப்பும் இல்லை. இந்த ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் அணுமின் நிலையங்களின் செயல்பாட்டினால் அவற்றில் பணிபுரியும் மக்களுக்கு எந்தவிதமான பாதகமான உடல்நல பாதிப்புகளும் இல்லை என்பதை தெளிவாக்குகின்றன.

இந்தத் தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் வாய்மொழி பதிலில் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகள் அவசியம்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகளின் அவசியத்தை, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாநில பொதுப்பணி ஆணையகங்கள்  தலைவர்களின் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். நாட்டைக் கட்டமைப்பதில் பொதுப்பணி ஆணையங்களின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அதிகாரிகளின் தகுதிகள் நிலைநிறுத்தப்படுவது மட்டுமின்றி, அது குறித்து வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நிர்வாக அமைப்புகளின் தரம், நேர்மை, செயல்திறனை வடிவமைப்பதில் பொதுப் பணி ஆணையங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். நாட்டிற்காக சேவையாற்றுவதற்கு திறமையான, பாரபட்சமற்ற மற்றும் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றும் தனிநபர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ள அரசியல் சாசன  நிறுவனங்களாக பொதுப் பணி ஆணையகங்கள் திகழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குடிமைப் பணிகளின் மீதான மாறிவரும் தேவைகளை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் நிர்வாகம், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், பொருளாதார மாற்றம் போன்ற தேசிய நலன் சார்ந்து நடவடிக்கைகளுக்கு அரசு அளித்து வரும் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது,தேர்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணி அலுவலர்களின் தரத்தைப் பொறுத்தது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.