Saturday, December 06 2025 | 05:44:34 AM
Breaking News

பிராந்திய டிஜிட்டல் சுகாதார உச்சிமாநாடு 2025-ல், பரிமாற்றத்தக்க, தரநிலைகள் சார்ந்த சுகாதாரச் சூழல் அமைப்புகளுடன் முன்னெடுத்துச் செல்ல நாடுகள் முடிவு

Connect us on:

புதுதில்லியில் நடைபெற்ற பிராந்திய  திறந்தநிலை டிஜிட்டல் சுகாதார உச்சி மாநாடு  2025-ன் இரண்டாம் நாளில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதிலுமிருந்து வந்த சுகாதாரத்துறை பிரதிநிதிகள் வெளிப்படையான  தரநிலைகள் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மூல தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய, அளவிடக்கூடிய டிஜிட்டல் சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றிய செயல்விளக்கங்களை செய்து காட்டினர். இதனைத் தொடர்ந்து, விரிவான  தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு தைமூர்  ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் பொது சுகாதார உள்கட்டமைப்பை நிறுவுவதில் அனுபவங்கள், சவால்கள் மற்றும் புதுமைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நாள் முழுவதும், விளக்கக்காட்சிகள், டிஜிட்டல் சுகாதார மாற்றத்திற்கான பல்வேறு அணுகுமுறைகள்  எடுத்துரைக்கப்பட்டன.  இந்தியா தனது வெற்றியை பகிர்ந்து கொண்டது. மின்னணு சுகாதாரப் பதிவுகளை ஏற்றுக்கொள்வதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்தது. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப  டிஜிட்டல் உள்கட்டமைப்பு எவ்வாறு மாற்றியமைக்கப்படுகிறது என்பதை பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் மாலத்தீவுகள் நிரூபித்தன. தாய்லாந்து நோய் கண்காணிப்பை மாற்றியமைப்பதிலும், சுகாதாரத் திட்டங்களை டிஜிட்டல் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள சவால்களை சமாளிப்பதிலும் அதன் அனுபவங்களைப் பற்றி விவாதித்தன.

 தேசிய மட்டத்தில், தொழில்நுட்பம் மட்டுமே உலகளாவிய சுகாதார பாதுகாப்பை வழங்க முடியாது என்ற தெளிவான செய்தியை அமர்வு விளக்கியது.  நம்பிக்கை, நிர்வாகம் மற்றும் சட்டம் வழிநடத்த வேண்டும். நம்பிக்கையை வளர்ப்பதற்கு வலுவான தரவு பாதுகாப்பு சட்டங்கள், மக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார பதிவுகளின் சட்ட அங்கீகாரம் எவ்வளவு அவசியம் என்பதை இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – டிசம்பர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது

சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் சார்பில் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் …