Saturday, January 24 2026 | 11:14:16 AM
Breaking News

ஊட்டச்சத்து அடிப்படையிலான சுகாதாரமான தின்பண்டங்கள் மற்றும் உணவுக் கலவைகளை அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது

Connect us on:

இந்தியாவின் சிறப்புமிக்க பாரம்பரிய மருத்துவமுறையை உலகறியச் செய்யும் வகையில் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆரோக்கியமான இந்தியா, உன்னத இந்தியா என்ற கருப்பொருளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு ஏராளமான  பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த அரங்கிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி மற்றும் சோவா ரிக்பா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் கீழ் முழுமையான உடல் நலத்திற்கான தீர்வு குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

ஆயுஷ் சுகாதார முறைகள் குறித்து தனித்துவ தன்மையுடன் ஒவ்வொரு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் டிஜிட்டல் அடிப்படையிலான பரிசோதனைகள் உணவுக்கட்டுப்பாடு குறித்த செயல் விளக்கங்கள், விளையாட்டுக்கள், மற்றும் துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் என பல வகையான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியில் ஊட்டச்சத்துடன்  கூடிய சுகாதாரமான தின்பண்டங்கள் மற்றும் உணவுக் கலவைகளை அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.  மேலும் இந்தக் கண்காட்சியில் இலவச மருந்துகள், மருத்துவ ஆலோசனைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சித்த மருத்துவ முறையின்படி ஆரோக்கியத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறிப்பாக செம்பருத்தி டீ, பஞ்சமுட்டிக் கஞ்சி போன்றவை குறித்தும்  பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

About Matribhumi Samachar

Check Also

ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின் தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு …