Friday, December 05 2025 | 10:08:06 PM
Breaking News

தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1 கோடியே 53 லட்சம் மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன

Connect us on:

வேளாண் உற்பத்தி மற்றும் மண்வள மேலாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக சமநிலையைப் பராமரிப்பது மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் மண் ஆரோக்கியம் மற்றும் மண்வளம் பராமரிப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வேளாண் அமைச்சக இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை, திரு ஜி. செல்வம், திரு கே. நவாஸ்கனி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இதனைத் தெரிவித்தார். மண்வளத்தைக் கண்டறிய மண்மாதிரி எடுக்கப்பட்டு, ஹைட்ரஜன், இயற்கை, கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபர் போன்ற சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனிசு மற்றும் போரான் சத்துக்கள் மற்றும் மின்னூட்டம் போன்றவற்றின் அளவுறுக்கள் குறித்த பகுப்பாய்வு, நிலையான நடைமுறைகளின் கீழ் பரிசோதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதாவது, குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்வள அட்டையை விநியோகிக்கும் வகையில் விவசாய நிலங்களில் மண் ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் குறித்த பகுப்பாய்வை மதிப்பீடு செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மண்ணில் உள்ள ஊட்டசத்துக்களின் நிலை குறித்த தகவல்கள் மற்றும் மண் ஆரோக்கியம், வளத்தை மேம்படுத்துவதற்கு தேவையான உர வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டு அளவு குறித்த பரிந்துரைகளும் மண்வள அட்டைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதன் மூலம் குறைந்த செலவில் அதிக விளைச்சலை பெற முடியும் என்று அவர் தெரிவித்தார். 2014-15-ம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 52 லட்சத்து 51 ஆயிரத்து 840 மண்வள அட்டைகள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 2022-23-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான மண்வள அட்டைகளின் விநியோகம் குறித்த ஆண்டு மற்றும் மாவட்ட வாரியான தகவல்கள் அதற்கான இணையதளத்தில் இணைப்பு-1-ல் (16.07.2025) கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மண் ஆரோக்கியம் மற்றும் வளத்திட்டத்திற்காக இத்திட்டம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து இதுவரை 127 கோடியே 19 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் மண் பரிசோதனைக்காக நிரந்தர ஆய்வகங்கள் உட்பட மண்சோதனைக்கான நடமாடும் ஆய்வகங்கள் மற்றும்  சிறிய அளவிலான ஆயவகங்களும் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் விவரங்கள் பின்வருமாறு:

 

வ.எண்

 

மண் பரிசோதனை ஆய்வகங்களின் வகைப்பாடு

 

மண் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை

1 நிரந்தர மண் பரிசோதனை ஆய்வகங்கள் 37
2 நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகங்கள் 21
3 கிராமங்கள் நிலையிலான மண் பரிசோதனை ஆய்வகங்கள் 1
4 வேளாண் ஆராய்ச்சி மையத்தின் சிறிய மண் பரிசோதனை ஆய்வகங்கள் 31
5 தமிழ்நாடு மாநில வேளாண் பல்கலைக்கழகத்தின் நிரந்தர ஆய்வகங்கள் 12
6 பள்ளிகளில் சிறு அளவிலான மண் பரிசோதனை ஆய்வகங்கள் 29
  மொத்தம் 131

இந்த அனைத்து 131 மண் பரிசோதனை ஆய்வகங்களும் செயல்பாட்டில் உள்ளதாக மாநில அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அணுக்கதிர் அடிப்படையிலான ஸ்பெக்ட்ராமீட்டர் கருவி/ பிளாஸ்மா ஸ்பெக்ட்ராமீட்டர் போன்ற சாதனங்களுடன் ஏற்கனவே உள்ள மண் பரிசோதனை கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார். டிஜிட்டல் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மண்வள அட்டையை ஆன்லைன் மூலம் பெறுவதற்கான மண் ஆய்வக பதிவகம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மண் பரிசோதனை முடிவுகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் மண்வள அட்டைகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இத்திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை தமிழ்நாட்டில் சென்னையை தவிர இதர 37 மாவட்டங்களில் ஆண்டு மற்றும் மாவட்ட வாரியான மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதற்கான விவரங்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 2014-15-ம் ஆண்டில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 365 மண்வள அட்டைகளும், 2025-26-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி வரை 1,49,27,425 மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இணைப்பு -1
S.No District 2014-5 Cycle I (2015-16 and 2016-17) Cycle II (2017-18 and 2018-19) 2019-20 2022-23 2023-24 2024-25 2025-26 (As on 16.07.2025) Total
1 Ariyalur 8,000 110,109 120,886 1,146 2,220 4,001 7,350 1,601 255,313
2 Chengalpattu 3,690 7,299 9,350 556 20,895
3 Coimbatore 11,500 119,500 116,813 2,102 2,440 4,600 6,050 1,052 264,057
4 Cuddalore 10,000 320,493 310,644 1,247 7,240 13,800 20,250 2,910 686,584
5 Dharmapuri 9,000 210,300 210,300 1,048 2,290 4,900 10,100 1,359 449,297
6 Dindigul 8,000 245,053 249,291 1,938 2,890 6,167 10,050 1,629 525,018
7 Erode 12,600 193,779 199,121 1,617 1,940 4,200 8,774 2,916 424,947
8 Kallakurichi 4,740 8,402 12,400 1,144 26,686
9 Kancheepuram 10,000 141,729 213,656 1,056 3,040 5,500 7,100 1,239 383,320
10 Kanyakumari 9,500 172,333 237,482 2,040 1,090 1,900 3,050 2,671 430,066
11 Karur 12,210 150,433 147,121 2,185 1,390 2,898 6,700 3,089 326,026
12 Krishnagiri 12,900 257,080 243,205 1,098 2,840 6,300 11,450 1,918 536,791
13 Madurai 14,800 257,027 257,027 2,044 4,590 8,451 11,750 4,123 559,812
14 Mayiladuthurai 2,590 4,702 7,350 14,642
15 Nagapatinam 12,110 147,289 145,188 1,603 2,240 3,900 7,900 1,473 321,703
16 Namakkal 12,200 231,949 243,766 1,423 3,340 6,506 11,950 1,878 513,012
17 Perambalur 12,500 127,118 119,188 1,345 1,390 2,500 5,950 1,880 271,871
18 Pudukottai 11,500 342,435 330,797 2,594 4,940 9,800 14,300 2,152 718,518
19 Ramanathapuram 11,000 218,405 206,604 4,046 4,690 8,600 13,650 1,189 468,184
20 Ranipet 3,440 5,700 7,700 1,253 18,093
21 Salem 10,000 262,759 252,388 3,626 3,590 7,440 15,000 2,497 557,300
22 Sivagangai 7,000 356,489 352,416 1,876 4,640 8,798 12,700 1,868 745,787
23 Tenkasi 0 0 0 0 2,490 3,940 7,150 1,233 14,813
24 Thanjavur 9,700 298,434 289,745 1,833 6,790 11,800 20,700 3,789 642,791
25 The Nilgiris 6,000 71,561 70,300 984 330 612 670 649 151,106
26 Theni 6,000 153,724 137,573 1,418 1,940 2,623 4,354 750 308,382
27 Thiruppur 6,000 121,966 139,296 2,569 4,940 5,135 9,200 1,630 290,736
28 Thiruvallur 12,200 198,906 177,748 1,115 4,440 10,436 14,232 1,874 420,951
29 Thiruvannamalai 12,900 339,508 365,777 2,131 2,440 17,514 26,852 3,140 770,262
30 Thiruvarur 12,800 174,578 169,735 1,252 1,940 8,893 15,700 1,612 386,510
31 Thoothukudi 9,400 205,435 210,451 1,858 2,890 8,700 14,950 2,565 456,249
32 Tiruchirapalli 10,010 303,098 261,560 2,612 5,740 8,300 12,150 2,375 605,845
33 Tirunelveli 9,500 269,729 277,927 2,339 8,940 4,076 5,850 1,220 579,581
34 Tirupathur 4,640 4,000 6,050 274 14,964
35 Vellore 10,035 250,339 252,115 2,472 2,440 5,101 7,550 877 530,929
36 Villupuram 12,500 606,290 570,154 2,423 7,390 13,906 19,400 2,751 1,234,814
37 Virudhunagar 12,500 142,152 138,380 1,277 5,440 9,000 14,318 2,918 325,985
Total 324,365 7,000,000 7,016,654 58,317 134,050 250,400 400,000 68,054

15,251,840

About Matribhumi Samachar

Check Also

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான  கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது …