Monday, December 29 2025 | 01:38:01 AM
Breaking News

அரசு கொள்முதலில் குறு, சிறு நிறுவனங்கள் பங்கேற்க அதிகாரமளிக்கும் அரசு மின் சந்தை தளம்

Connect us on:

அரசு மின் சந்தை தளமான ஜிஇஎம் (GeM)-ன் மூலமாக குறு, சிறு நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்,  புத்தொழில் நிறுவனத்தினர் போன்றோர் அரசு கொள்முதல் நடைமுறைகளில் அதிக அளவில் பங்கேற்று, பல்வேறு துறைகளில் பணி ஆணைகளைப் பெற்று பலன் பெறுகின்றனர்.

2025 நவம்பர் 30 நிலவரப்படி, ஜிஇஎம் தளத்தில் 11.25 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்களது நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக ₹7.44 லட்சம் கோடி மதிப்புள்ள பணி ஆணைகளைப் பெற்றுள்ளனர். இது ஜிஇஎம் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட மொத்த மதிப்பில் 44.8 சதவீதமாகும். இது இத்துறையின் வருடாந்திர கொள்முதல் இலக்கான 25 சதவீதத்தை விட அதிகமாகும். குறு, சிறு, நிறுவனங்களின் இந்தப் பங்கேற்பு பொது கொள்முதலில் அந்த நிறுவனங்களின் சிறந்த பங்கைப் பிரதிபலிக்கிறது.

பெண்கள் தலைமையிலான நிறுவனங்களும் இந்த தளத்தில் அதிக அளவில் பதிவு செய்துள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்குச் சொந்தமான குறு, சிறு நிறுவனங்கள் ₹78,066 கோடி மதிப்புள்ள ஒட்டுமொத்த பணி ஆணைகளைப் பெற்றுள்ளன.

பரிவர்த்தனைகளை எளிதாக்குவதுடன், பொது கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை, வேகம் ஆகியவை ஜிஇஎம் தளத்தின் முக்கிய அம்சங்களாகும். பல்வேறு மாநிலங்கள், சமூகங்களைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கேற்பை இது உறுதி செய்கிறது. கொள்முதல் கொள்கை விதிகளுடன் டிஜிட்டல் செயல்முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், உள்ளூர் நிறுவனங்கள் அரசு கொள்முதலில்  ஈடுபட இது உதவுகிறது. இதன் மூலம் டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் நோக்கங்களை இந்த தளம் வலுப்படுத்துகிறது.

About Matribhumi Samachar

Check Also

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறைதீர்க்கும் பணிகளை விரைவுபடுத்த பயணிகளுக்கு உதவும் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையிலும், வழித்தட எண்ணிக்கையிலும் பெரிய உயர்வுக்கு வழிவகுத்தது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டு வந்தாலும், விமான தாமதங்கள், பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள், பொருள்கள் தொடர்பான சிக்கல்கள், நெரிசல், நீண்ட வரிசை, நெரிசல் மிகுந்த காலங்களில் போதுமான வசதிகள் இல்லாதது போன்ற தொடர்ச்சியான சவால்களையும் ஏற்படுத்தியது. பயணிகளை மையமாகக் கொண்ட இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த  பதில் செயல்முறை அவசியம். இந்த தேவைகளை உணர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், நிரந்தரமாக 24 மணி நேரமும் செயல்படும் பயணிகளுக்கான உதவி கட்டுப்பாட்டு அறையை நிறுவ முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது. டிசம்பர் 03, 2025 முதல் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திரு சமீர் குமார் சின்ஹா, இந்த மையத்தை தினமும் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகளை ஆய்வு செய்து, பயணிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்கிறார்.  குறைகளைத் தீர்ப்பதில் வேகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.