Sunday, December 07 2025 | 04:49:51 PM
Breaking News

தேசிய போர் நினைவுச்சின்னத்தில் என்சிசி-ன் 78-வது நிறுவன தின நிகழ்ச்சிகளை பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கிவைத்தார்

Connect us on:

தேசிய மாணவர் படை (என்சிசி), அதன் 78-வது நிறுவன தினத்தை நவம்பர் 23, அன்று நாடு முழுவதும் கொண்டாடவுள்ளது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, நவம்பர் 22 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒரு புனிதமான மலர்வளையம் வைக்கும் விழா நடைபெற்றது, இதில் பாதுகாப்புத் துறை  செயலாளர் திரு  ராஜேஷ் குமார் சிங் மற்றும் என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் ஆகியோர் முழு அமைப்பின் சார்பாகவும் வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இளைஞர் மேம்பாட்டில் என்சிசி-யின் உறுதியான பங்கை எடுத்துக்காட்டும் நாடு தழுவிய கொண்டாட்டத்தை இது பிரதிபலித்தது.

முப்படைகளின் அணிகளைச் சேர்ந்த மூன்று பெண் கேடட்களும் மலர்வளையம் வைத்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். விழாவிற்குப் பிறகு, பாதுகாப்புத் துறை  செயலாளர், என்சிசி தலைமை இயக்குநர் மற்றும் கூடியிருந்தவர்கள் தில்லியின் பல்வேறு பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட என்சிசி கேடட்களின் இசைக்குழு நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

1948-ம் ஆண்டு 20,000 கேடட்களுடன் நிறுவப்பட்ட என்சிசி, 2014 மற்றும் 2025- க்கு இடையில் 6 லட்சம் கேடட்கள் சேர்ப்பு உட்பட 20 லட்சம் கேடட்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக வளர்ந்துள்ளது. இன்று, அதன் தடம் இந்தியாவின் 780 மாவட்டங்களில் 713 ஆக விரிவடைந்து, நாட்டில் மிகவும் பரவலாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கேடட்கள் இரத்த தான இயக்கங்கள், மரம் நடும் நடவடிக்கைகள், ‘தூய்மையே சேவை ‘ பிரச்சாரங்கள் மற்றும் போதைப் பொருள் இல்லா இயக்கத்தின் கீழ் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு திட்டங்கள் போன்ற தொடர்ச்சியான பொது சேவை முயற்சிகள் மூலம் இந்த நாளை நினைவுகூர்ந்தனர். இந்த முயற்சிகள் சமூக ஈடுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் அமைப்பின் தொடர்ச்சியான கவனம் செலுத்தப்படுவதை நிரூபித்தன.

கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை செயலாளர், பல துறைகளில் என்சிசியின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.

என்.சி.சி தனது 77-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அது ஒரு துடிப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் அமைப்பாக தொடர்ந்து பரிணமித்து வருகிறது என்று கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த  பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.  ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”