Friday, September 18 2026 | 08:53:26 PM
Breaking News

கிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடனான மண்டல மின்சார மாநாடு மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெறுகிறது

Connect us on:

கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேச அரசுகளுடனான மண்டல மின்சார மாநாடு இன்று (ஜூன் 24-ம் தேதி) பாட்னாவில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், ஒடிசா மாநில துணை முதலமைச்சர் திரு கனக் வர்தன் சிங் தியோ, பீகார் மாநில எரிசக்தி துறை அமைச்சர் திரு பிஜேந்திர பிரசாத் யாதவ், ஜார்கண்ட் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் திரு சுதிவ்ய குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், மத்திய மின்சாரத் துறை செயலாளர், மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள் (மின்சாரம்/எரிசக்தி), மத்திய-மாநில மின்சாரத் துறை நிறுவனங்களின் தலைவர்கள்  மற்றும் மேலாண் இயக்குநர்கள், மத்திய மின்சார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாட்டின் மின்சார விநியோக அமைப்பு ஒருங்கிணைந்த தேசிய மின்சாரக் கட்டமைப்பாக உருவாகியுள்ளது என்றும், ‘ஒரே நாடு- ஒரே மின் கட்டமைப்பு’ என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையிலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான, நவீன மற்றும் நிதிசார் சாத்தியக் கூறுகள் குறித்தும், மின்சாரத் துறையின் முக்கியத்துவம் குறித்தும், அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் விரிவாக எடுத்துரைத்தார். 2024–ம் ஆண்டு மே மாதம் அதிகபட்ச மின்சார தேவை 250 ஜிகா வாட் ஆக இருந்தது. இந்தத் தேவைவெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதிகபட்ச மின்சாரத் தேவை 2025-ம் ஆண்டில் இதுவரை  242 ஜிகா வாட் ஆக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அதிகரித்து வரும் , மின்சார தேவையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டின் பிற்பகுதியில்  மின் உற்பத்தி 270 ஜிகா வாட் அளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் மின்சாரப் பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து மின் மிகை நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும்  அவர்  தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டும் வகையில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை திரு மனோகர் லால் வலியுறுத்தினார்.

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …