Thursday, January 22 2026 | 11:53:17 AM
Breaking News

வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் பாதுகாப்புத் தயார் நிலைக்கான அரியவகை கனிமங்களின் முக்கியத்துவம்

Connect us on:

புவிசார் அரசியல், நாட்டின் இறையாண்மை மற்றும் மதிப்புச் சங்கிலி போன்ற அம்சங்களில் அரியவகை கனிமங்களின் பங்களிப்புக் குறித்து உயர்நிலை குழுக் கூட்டம் புதுதில்லியில் இம்மாதம் 17-ம் தேதி நடைபெற்றது.  கூட்டுப் போர்த்திறனாய்வு மையத்தின சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷ்ல் அசுதோஷ் தீட்சித் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். நாட்டின் பாதுகாப்பு, பாதுகாப்புப் படையின் திறன் மேம்பாடு, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான உத்திசார் நடவடிக்கைகளுக்கு அரியவகை கனிமங்களின் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஜெட் விமான என்ஜின்கள், ஏவுகனைகள், துல்லியமாக தாக்கி அழிக்கும் உபகரணங்கள், ரேடார்ஸ் செயற்கைக் கோள்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் செமிக் கண்டக்டர் உட்பட நவீன பாதுகாப்பு அமைப்பு முறைகள் ஆகியவற்றின் உருவாக்கம் அரியவகை கனிமங்களைச் சார்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

உலக அளவில் அரியவகை கனிமங்களின் விநியோக நடவடிக்கைகள் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களை சார்ந்திருப்பது குறித்தும், முக்கியத்துவம் வாய்ந்த தளவாட உற்பத்திக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி சார்ந்திருக்கும் நிலை குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மற்றும் செயல்பாட்டு தயார் நிலைக்கு ஏற்ப தன்னிறைவு பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், பாதுகாப்பான நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய அரியவகை கனிமங்களின் விநியோக நடைமுறைகளின் அவசியம் குறித்து விளக்கினார்.  வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஏர் மார்ஷல் அசுதோஷ்  தீட்சித் வலியுறுத்தினார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …