Monday, January 19 2026 | 04:17:50 AM
Breaking News

பிரதமர் சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா தொழிற்சாலையை நவம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார்

Connect us on:

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர்  விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்பு பொருளாதார மண்டலத்தில்  அமைந்துள்ள சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா (SAESI) தொழிற்சாலையை திறந்து வைப்பார்.

இது ஏர்பஸ் மற்றும் போயிங் 737  விமானங்களுக்கு சக்தி அளிக்கும் லீடிங் எட்ஜ் ஏவியேஷன் ப்ராபல்ஷன் எஞ்சின்களுக்கான சாஃப்ரானின் பிரத்யேக பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (எம்ஆர்ஓ) வசதியாகும். இந்த தொழிற்சாலையை நிறுவுவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, ஏனெனில் இது மிகப்பெரிய உலகளாவிய விமானங்களுக்கான எம்ஆர்ஓ வசதிகளில் ஒன்றாகும், ஆனால் முதல் முறையாக, ஒரு உலகளாவிய இயந்திர அசல் உபகரண உற்பத்தியாளர்  இந்தியாவில் ஒரு எம்ஆர்ஓ செயல்பாட்டை அமைத்துள்ளது.

ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா மண்டலத்துக்குள்  45,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த அதிநவீன வசதி, சுமார் ரூ1,300 கோடி ஆரம்ப முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 300 லீப்  இயந்திரங்களுக்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்ட  வசதி, 2035-ம் ஆண்டுக்குள் முழு செயல்பாட்டு திறனை அடைந்தவுடன் 1,000 க்கும் மேற்பட்ட உயர் திறமையான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களைப் பணியமர்த்தும். உலகத்தரம் வாய்ந்த இயந்திரப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்க இந்த வசதி மேம்பட்ட செயல்முறை உபகரணங்களைக் கொண்டிருக்கும்.

எம்ஆர்ஓ வசதி விமானத் துறையில் தற்சார்பு இலக்கை நோக்கி ஒரு பெரிய படியாக இருக்கும். எம்ஆர்ஓ-வில் உள்நாட்டு திறன்களை வளர்ப்பது அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைக்கும். அதிக மதிப்புள்ள வேலைவாய்ப்பை உருவாக்கும், விநியோகச் சங்கிலி மீள்தன்மையை வலுப்படுத்துவதுடன், இந்தியாவை உலகளாவிய விமான மையமாக நிலைநிறுத்தும். இந்தத் துறையின் விரைவான வளர்ச்சியை ஆதரிக்க ஒரு வலுவான எம்ஆர்ஓ சூழல் அமைப்பை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2024-ல் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், எம்ஆர்ஓ வழிகாட்டுதல்கள் 2021 மற்றும் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை 2016 உள்ளிட்ட அரசின் முக்கிய கொள்கை முயற்சிகள், வரி கட்டமைப்புகளை சீர்திருத்துவது மூலமும், ராயல்டி சுமைகளைக் குறைப்பதன் மூலமும் எம்ஆர்ஓ வழங்குநர்களுக்கான செயல்பாடுகளை எளிதாக்கியுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு …