இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 25, 2025) வெளியிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தற்போது ஓல் சிக்கி எழுத்துருவில் எழுதப்பட்டு சந்தாலி மொழியில் கிடைப்பது, அம்மொழியைப் பேசும் அனைத்து மக்களுக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளித்திடும் என்று கூறினார். இது அவர்கள் தங்களது சொந்த மொழியில் அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்துப் புரிந்துகொள்ள உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஓல் சிக்கி எழுத்துருவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம் என்று அவர் கூறிய அவர், இந்த தருணத்தில் ஓல் சிக்கி எழுத்துருவில் இந்திய அரசியல் சட்டத்தை புத்தக வடிவில் கொண்டு வந்ததற்காக மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கு குடியரசுத்தலைவர் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2003 -ம் ஆண்டின் 92 – வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சந்தாலி மொழி, இந்தியாவின் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாகும். ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான பழங்குடியின மக்களால் இம்மொழி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
Matribhumi Samachar Tamil

