Saturday, December 06 2025 | 04:33:42 AM
Breaking News

வீர கதை 4.0 சூப்பர் -100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சரும் கல்வி அமைச்சரும் பாராட்டினர்

Connect us on:

புதுதில்லியில் 2025ஜனவரி 25 அன்று நடைபெற்ற வீர கதை 4.0 சூப்பர்-100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் ஆகியோர் பாராட்டினர். வெற்றியாளர்களான 100 பேரில் 66 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். பாராட்டு விழாவில்வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 ரொக்கப் பரிசுபதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2025ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் காணும் சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களில் இந்த சூப்பர் -100 பேரும் அடங்குவர்.

பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில்வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடுநாட்டின் துணிச்சலான வீரர்களின் புகழ்பெற்ற வரலாற்றுடன் இளைஞர்களை இணைக்கும் வீர கதையின் நோக்கத்தை அடைவதில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் கூட்டு முயற்சிகளைப் பாராட்டினார். இத்திட்டத்தின் நான்காவது பதிப்பில் 1.76 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் அகில இந்திய அளவில் பங்கேற்றது பற்றி  குறிப்பிட்ட அவர்இது கல்வியின் மூலம் துணிச்சலான இதயங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்றார் . போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் புத்திசாலித்தனம்உற்சாகம் மற்றும் தேசபக்தியை அவர் பாராட்டினார்.

வீர கதை 4.0 சூப்பர்-100 வெற்றியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு ராஜ்நாத் சிங்மணிப்பூரைச் சேர்ந்த நெம்னெனெங்‘ என்ற 10-ம் வகுப்பு மாணவி குழந்தையாக இருந்தபோது பெற்றோரை இழந்ததைக் குறிப்பிட்டார். பல சிரமங்களுக்கு மத்தியிலும் தனது படிப்பை கைவிடாமல் வெற்றி பெற்றவர்களில் ஓர் இடத்தைப் பெற்ற அவரது விடாமுயற்சியை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங்சந்திரசேகர் ஆசாத்அஷ்பாகுல்லா கான் போன்ற துணிச்சலான வீரர்களிடமிருந்து தொடர்ந்து உத்வேகம் பெறுமாறு பாதுகாப்பு அமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டார். எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் தேசத்தின் மீதான பெருமித உணர்வு மிக முக்கியமான அம்சம் என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்வீர கதை போன்ற முன்முயற்சிகள் பள்ளி மாணவர்களுக்கு வீரதீர செயல்களுக்காக விருது வென்றவர்களின் வீரம் மற்றும் தியாகங்களைப் பற்றி கற்பிக்கின்றன.அதே நேரத்தில் இளம் மனங்களின் படைப்பாற்றலை வளர்க்கின்றன என்று குறிப்பிட்டார். வரைதல்வண்ணம் தீட்டுதல்கட்டுரை எழுதுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2.5 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த 1.76 கோடி மாணவர்களின் சாதனை முறியடிக்கும் பங்கேற்பை அவர் எடுத்துரைத்தார்தேசத்திற்கு  மகத்தான சேவை மற்றும் தியாகம் செய்த வீரர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போதுபரம் வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் 1999 கார்கில் போரிலிருந்து தனது எழுச்சியூட்டும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தைரியம்தன்னலமற்ற தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மதிப்புகளை பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார். “உண்மையான வீரம் என்பது போரில் மட்டுமல்லஅன்றாட வாழ்வில் சரியானவற்றுக்காக நிற்பதிலும் உள்ளது” என்று கூறி பங்கேற்பாளர்களுக்கு உத்வேகம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்,  ராணுவத் தளபதி ஜெனரல் அனில் சவுகான்கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதிவிமானப் படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார்செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) திரு சஞ்சீவ் குமார்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி நெட்வொர்க்குகள் தொடங்கப்பட்டுள்ளன.  தற்போது, நாட்டின் 99.9 சதவீத மாவட்டங்களில் 5ஜி …