Sunday, October 11 2026 | 08:05:16 PM
Breaking News

பத்ம விருதுகள் 2025 அறிவிக்கப்பட்டுள்ளன

Connect us on:

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப்பணி, பொது நலன், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பான சேவைக்காக ‘பத்ம பூஷண்’  விருதும்  எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவைக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மார்ச் / ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில்  குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. 2025-ம் ஆண்டிற்கான 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள், இந்த பட்டியலில் வெளிநாட்டினர் / வெளிநாடுவாழ் இந்தியர் / பிஐஓ / ஓசிஐ பிரிவைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெறும் 13 பேரும் அடங்குவர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு நல்லி குப்புசாமி செட்டிக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவிலும்  திரு ஏ  அஜித்குமார், திருமதி ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு கலைப் பிரிவிலும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

கலைக்கான பத்மஸ்ரீ விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு புரிசை கண்ணப்ப சம்பந்தம்,  திரு குருவாயூர் துரை, திரு ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு வேலு ஆசான் புதுச்சேரியைச் சேர்ந்த திரு பி. தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், கல்வி, இதழியல் பிரிவில் திரு லட்சுமிபதி ராமசுப்பையர்,  சமையல் பிரிவில் திரு கே தாமோதரன், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் திரு எம் டி ஸ்ரீனிவாஸ்,  விளையாட்டுகள் பிரிவில் திரு ஆர் அஸ்வின், வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் திரு ஆர் ஜி சந்திரமோகன், இலக்கியம் மற்றும் கல்விப்  பிரிவில் திரு சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பாரம்பரிய அறிவும் மக்கள் பங்களிப்பும் அவசியம்: தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்!

புதுதில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் (NGT) ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் ஆகியவற்றின் எதிர்காலம்’ (Future of Environment …