புதுதில்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2015-ம் ஆண்டு பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட போது நவம்பர் 26-ம் நாளை அரசியல் சாசன தினமாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். அந்த முடிவு உண்மையில் அர்த்தமுடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்நாளில் நமது அரசியல் சாசனம் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் மற்றும் அதை உருவாக்கியவர்களுக்காக ஒட்டுமொத்த நாடும் தமது மரியாதையை செலுத்தியுள்ளதாகக் கூறினார்.
இந்தியர்களாகிய நாம், நமது அரசியல் சாசனத்தின் மீது தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்பிக்கைக் கொண்டுள்ளோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு நிகழ்வுகள் மூலம் மக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு அரசியல் சாசன சி்ந்தனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசியல் சாசன தினத்தைத் கொண்டாடும் பாரம்பரியத்தை தொடங்கி தொடர்ந்து கொண்டாடுவது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மதிப்புடையது என்று கூறினார்.
உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளுக்கு உதாரணமாகத் திகழும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மக்களின் விருப்பங்களை இந்திய நாடாளுமன்றம் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.சுமார் 250 மில்லியன் பேர் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டதன் மூலம் பொருளாதார நிதியின் அளவுகோலில் உலகின் மிகப்பெரிய வெற்றியை இந்தியா அடைந்துள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

