புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய தகவல் , ஒளிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் முக்கிய முன் முயற்சிகளை தொடங்கிவைத்தனர்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் அருண் சாவ்லா, இந்திய திரைப்பட தயாரிப்பாளர் திரு சேகர் கபூர் மற்றும் பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கௌரவ் திவேதி ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற மாநாட்டைப் போன்று, உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES) சர்வதேச அளவில் நடத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை எதிரொலிக்கும் வகையில், மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர், பாரம்பரியம், கதை சொல்லல், கலாச்சார முக்கியத்துவம் நிறைந்த இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு பரந்த உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
சுவாமி விவேகானந்தர், சிகாகோ உலக கண்காட்சியின் அரங்குகளில் எதிரொலித்த நமது நாட்டின் வளமான கலாச்சாரம், இன்று யோகா, கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் ஆயுர்வேதம் போன்ற பல்வேறு துறைகளின் முன்முயற்சிகள் பிரதமரால் உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது” என்று திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். “இந்த முயற்சியின் விரிவாக்கமே வேவ்ஸ், இந்தியாவை படைப்பாளி பொருளாதாரத்தின் உலகளாவிய தலைநகராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சமயத்தில், வேவ்ஸ் பஜார் என்பது திரைப்படம், தொலைக்காட்சி, இசை, விளையாட்டு, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், காமிக்ஸ் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த படைப்பாளர்கள், வாங்குபவர்கள், கூட்டுப்பணியாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாக உருவெடுக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் தெரிவித்தார்.
அலைகள் விருதுகள்
WAVES விருதுகள் பிப்ரவரி 15, 2025 அன்று பரிந்துரைகளுடன் தொடங்க உள்ளன. பல்வேறு படைப்பாற்றல் துறைகளில் சிறந்து விளங்குவதைக் கொண்டாடும் வேவ்ஸ் விருதுகள், விளையாட்டு, திரைப்படம் விளம்பர பிரச்சாரம் போன்ற பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் சமூக செல்வாக்கு போன்ற துறைகளில் வாழ்நாள் சாதனைகள் மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை கௌரவிக்கும் சிறப்பு தேர்வு விருதுகளும் இந்த விருதுகளில் அடங்கும்.
Matribhumi Samachar Tamil

