Saturday, January 24 2026 | 12:11:25 PM
Breaking News

அவசரநிலையின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும், ஜனநாயகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ‘அரசியலமைப்பு படுகொலை தினத்தை’ கலாச்சார அமைச்சகம் மற்றும் தில்லி அரசு கடைப்பிடிக்கிறது

Connect us on:

இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50-ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகம் தில்லி அரசுடன் இணைந்து ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி  ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, அவசரகாலத்தின் இருண்ட நாட்களை ஒரு வரலாற்று நிகழ்வாக மட்டுமல்லாமல், ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதில் ஒரு நீடித்த பாடமாகவும், நினைவு கூர்வதன் முக்கியத்துவம் குறித்தும்  எடுத்துரைத்தார்.

சமூக மற்றும் தேசிய வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கும் இதுபோன்ற நிகழ்வுகள், எப்போதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதற்கும், இதுபோன்ற இருண்ட சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நமது இளைஞர்களுக்கு சரியான மதிப்பீடுகளை எடுத்துக் கூறுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்ததாகவும், இது உள்துறை அமைச்சக அறிவிப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நாள் சர்வாதிகாரத்தின் ஆபத்துகள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையில் ‘தேசத்திற்கு முன்னுரிமை’ என்ற கருத்து இப்போது மக்களின் இதயங்களில் எதிரொலிப்பதாகவும், அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் சிறையில் கழித்த ஆயிரக்கணக்கான ஜனநாயக வீரர்களின் போராட்டத்தால் இந்த மாற்றம் சாத்தியமானது என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தியாவின் நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தையும் அவசரநிலையின் கடுமையான தாக்கத்தையும் எடுத்துரைத்தார்.

 ஜனநாயகம் என்ற கருத்தை உலகம் கற்பனை கூட செய்ய முடியாத நேரத்தில், இந்தியா ஏற்கனவே பல்வேறு வடிவங்களில் ஜனநாயக அமைப்புகளை நிறுவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் தூக்கு மேடையில் மரணத்தை தழுவிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.  மகத்தான தியாகத்தின் மூலம் நாம் பெற்ற கருத்து சுதந்திரம் அவசரநிலை என்ற பெயரில் பறிக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …