Friday, December 05 2025 | 11:45:37 PM
Breaking News

சென்னை ஐஐடி சான்சிபார், ரசாயன செயல்முறைப் பொறியியலில் புதிய இளநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது

Connect us on:

 

சென்னை ஐஐடி 2025-26ம் கல்வியாண்டில் ரசாயன செயல்முறைப் பொறியியலில்  புதிய இளங்கலை அறிவியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சான்சிபார் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நான்காண்டு முழுநேர இளநிலைப் பட்டப்படிப்பில் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ரசாயனப் பொறியியல் அடிப்படையில் செயல்முறை ஆய்வகப் பணிகள், தொழில்துறை சார்ந்த திட்டங்கள், பல்வேறு துறைகளுக்கு இடையே கற்றலை ஊக்குவிக்கும் விருப்பப் பாடங்கள் என விரிவான பாடத்திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

உயர்ந்த கல்வித் தரத்துடன், உலகளாவிய முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் சென்னை ஐஐடி, ஐஐடிஎம் சான்சிபார், நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியக் குழுவால் இப்பாடங்கள் கற்பிக்கப்படும்.

 

இந்த படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க 2025  ஜூலை  6 கடைசி நாளாகும். [email protected] என்ற இணைய தள முகவரி மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம். மாணவர்கள் admissions.iitmz.ac.in/bscpe என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

உலகம் முழுவதிலும் இருந்து இப்பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை வரவேற்று பேசிய சென்னை ஐஐடி சான்சிபார் வளாக பொறுப்பு இயக்குநர் பேராசிரியர் பிரீத்தி அகாலயம், “ரசாயனப் பொறியாளர் என்ற முறையில், இப்பாடத்திட்டத்தை கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி நெட்வொர்க்குகள் தொடங்கப்பட்டுள்ளன.  தற்போது, நாட்டின் 99.9 சதவீத மாவட்டங்களில் 5ஜி …