Friday, January 02 2026 | 04:35:59 AM
Breaking News

ஜம்மு-காஷ்மீரில் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Connect us on:

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பிராந்தியத்தில் புத்தொழில்களுக்கான ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஜம்மு காஷ்மீர் கனெக்ட்” என்ற சிறப்பு புத்தொழில் மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சந்தை இணைப்புகள், நிதி நெட்வொர்க்குகள் மற்றும் சர்வதேச விரிவாக்க வாய்ப்புகள் ஆகியவற்றில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது. இது 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பார்வையுடன் ஒத்துப்போகிறது.

இந்த நிகழ்வில், ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் திரு ராஜீந்தர் குமார் சர்மா, மார்ச் 2024-ல் தொடங்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் புத்தொழில் கொள்கையின் விளைவுகளை எடுத்துரைத்தார். இது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் போர்ட்டலில் 250-க்கும் அதிகமான புதிய ஸ்டார்ட்அப் பதிவுகளுக்கு வழிவகுத்தது. இது குறுகிய காலத்தில் மொத்தம் 988 ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டில், ஜம்மு காஷ்மீரின் 20 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஐ.ஐ.டி.களில் 601 தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பட்டி நகரில் நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டை ட்ராய் மேற்கொண்டது

ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி நகரில் 2025 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை  இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை …