Wednesday, January 14 2026 | 10:44:31 AM
Breaking News

மஹா கும்பமேளா 2025: மவுனி அமாவாசை அன்று பக்தர்களின் பாதுகாப்பு, வசதிக்காக மேளா நிர்வாகம், காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள்

Connect us on:

மஹா கும்பமேளா 2025-ல் மவுனி அமாவாசையின் புனித தருணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவார்கள். அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில், மேளா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அவசர காலங்களில், பக்தர்களுக்கு உதவ மேளா நிர்வாகம், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து மஹாகும்பமேளா நகர் காவல்துறை கண்காணிப்பாளர்  திரு ராஜேஷ் திவேதி கூறுகையில், மவுனி அமாவாசை அன்று இரண்டாவது அம்ரித நீராடலுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். பக்தர்கள் விழிப்புடன் இருக்கவும், வதந்திகளைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகதா தெரிவித்தார். ஒழுங்கை பராமரிக்க காவல்துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையின் உதவியை நாட வேண்டும் என்றும் பக்தர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாககா கூறினார். பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் காவல்துறையினர், நிர்வாகத்தினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்ட மேலாண்மை:

செய்ய வேண்டியவை:

•    சங்கமத்தின்  படித்துறையை அடைய வழிகாட்டப்பட்ட பாதைகளைப் பயன்படுத்தவும்.

•    கங்கை நீராடலுக்குச் செல்லும்போது உங்கள் வரிசையில் இருக்கவும்.

•    குளித்து தரிசனம் செய்த பிறகு, நேரடியாக வாகனம் நிறுத்துமிடத்திற்குச் செல்லுங்கள்.

•    கோயில்களுக்குச் செல்லும்போது, உங்கள் பாதை வழியே, செல்லுங்கள்.

•    தேவைப்பட்டால் காவல் துறையினர் உதவியை நாடுங்கள்.

•    உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதிக்கவும்.

•    தடுப்புகள் மற்றும்  பாலங்களில் பொறுமையாக இருக்கவும்; அவசரப்படுவதைத் தவிர்க்கவும்.

•    காகிதம், சணல் அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பாத்திரங்கள் மற்றும் களிமண் கோப்பைகளை பயன்படுத்தவும்.

•    எல்லா படித்துறைகளும் சங்கமத்தின் ஒரு பகுதியே; நீங்கள் அடையும் படித்துறையில் குளிக்கவும்.

செய்யக்கூடாதவை:

•    பக்தர்கள் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கக்கூடாது.

•    பக்தர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்கவும்.

•    மேளாவில் பரப்பப்படும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.

•    சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் எந்த தவறான தகவலையும் நம்ப வேண்டாம்.

•    கோயில்களுக்குச் செல்லும்போது அவசரப்பட வேண்டாம்.

•    உரிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்குப் பதிலாக பாதைகளில் நிறுத்துவதைத் தவிர்க்கவும்; எந்த வழிகளையும் தடுக்க வேண்டாம்.

•    ஏற்பாடுகள் அல்லது சேவைகள் பற்றிய தவறான தகவல்களை ஏற்க வேண்டாம்.

•    தவறான செய்திகளை பரப்புவதைத் தவிர்க்கவும்.

•    புனித நீராடலுக்கு அவசரப்பட வேண்டாம்.

•    பிளாஸ்டிக் பைகள், பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …