Wednesday, January 07 2026 | 01:37:13 AM
Breaking News

டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்

Connect us on:

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, 2025 ஜனவரி 29-30 தேதிகளில் புதுதில்லியில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லஜேயும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா விவாதங்களுக்கான சூழலை அமைப்பார்.

தொழிலாளர் நல சீர்திருத்தங்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, இஎஸ்ஐ மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு சேவை  போர்ட்டல் மற்றும் மாதிரி வேலைவாய்ப்பு மையங்கள்  மூலம் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த தேசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …