Friday, January 02 2026 | 05:10:29 AM
Breaking News

இந்திய புள்ளியியல் நிறுவனத்தை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாற்ற நடவடிக்கை

Connect us on:

தொலைநோக்கு பார்வை கொண்ட புள்ளியியல் நிபுணர் பேராசிரியர் பிரசாந்தா சந்திர மஹலானோபிஸ்-ஸால் 1931-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ஐஎஸ்ஐ), புள்ளிவிவர ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1959-ம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்ட இந்நிறுவனமானது புள்ளியியல் முறைகளை மேம்படுத்துவதிலும், பல்வேறு பிரிவுகளில் அவற்றின் பயன்பாடுகளிலும் முன்னோடியாக உள்ளது. ஐ.எஸ்.ஐ கவுன்சில் இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவாகும். ஐ.எஸ்.ஐ சட்டம் மற்றும் ஐ.எஸ்.ஐ விதிமுறைகளின் அடிப்படையில், 2024-26 காலகட்டத்திற்கான புதிய கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. 26 அக்டோபர் 2024 அன்று நடைபெற்ற கவுன்சிலின் முதலாவது கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து டாக்டர் கொப்பிளில் ராதாகிருஷ்ணனை ஐ.எஸ்.ஐ., கவுன்சிலின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்ம பூஷண் விருது பெற்றவர் மற்றும் இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராகவும், இந்திய அரசின் விண்வெளித் துறையின் செயலாளராகவும் இருந்தார்.

1959-ம் ஆண்டு இந்தியத் தரச்சான்று சட்டத்தின்படி, இந்திய அரசுத் துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், அதன் எதிர்காலப் போக்கு குறித்த பரிந்துரைகளை வழங்கவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் குழுக்களை மத்திய அரசு அமைக்கிறது. இந்த விதியின் கீழ், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் 4-வது மறுஆய்வுக் குழு 2020 இல் அமைக்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மதிப்புமிக்க நிறுவனத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்திட்டத்தை வகுத்து தனது விரிவான அறிக்கையை இக்குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) முன்னாள் தலைமை இயக்குநருமான டாக்டர் ஆர்.ஏ.மஷேல்கர் தலைமையிலான இந்தக் குழு, பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம், ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவான மதிப்பாய்வை நடத்தியது. இந்தியாவிலும், உலகளவிலும் புள்ளியியல் அறிவியல் மற்றும் அதன் பயன்பாடுகளை மேம்படுத்துவதில் நிறுவனத்தின் பங்கை புத்துயிர் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான செயல்பாட்டு பரிந்துரைகளின் முடிவில் அறிக்கை  தயாரிக்கப்பட்டது.

‘மறுகற்பனை, மறுகண்டுபிடிப்பு மற்றும் மறுநிலைப்படுத்தல்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், குழு நிர்வாகம், கல்வித் திட்டங்கள், ஆராய்ச்சி முன்னுரிமைகள், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடும் 61 பரிந்துரைகளை அது முன்மொழிந்தது. ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடு, சவால்கள் மற்றும் அபிலாஷைகள் குறித்த நுண்ணறிவுகளைச் சேகரிக்க ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஐ.எஸ்.ஐ.யின் வெளிப்புற எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் மதிப்பிடுவதற்கும் தொழில்துறை வல்லுநர்கள், அரசுப் பிரதிநிதிகள் மற்றும் பிறகல்வி நிறுவனங்களையும் அவர்கள் கலந்தாலோசித்தனர். கண்டுபிடிப்புகள் மற்றும் வரைவு பரிந்துரைகள் குறித்து விவாதிக்க குழு மெய்நிகர் கூட்டங்களை நடத்தியது.  மேலும் கடந்த தசாப்தத்தில் ஐ.எஸ்.ஐ.யின் செயல்திறன் குறித்த ஆதார அடிப்படையிலான மதிப்பீட்டையும் மேற்கொண்டது. இதில் அதன் ஆராய்ச்சி வெளியீடு, கல்விப் புலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் தொடர்பு முயற்சிகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.  இடைவெளிகள் மற்றும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களோடு ஒப்பிடுவதற்காக ஐ.எஸ்.ஐ. நிறுவனத்துக்கு அளவுருக்கள் உருவாக்கப்பட்டன. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியமைக்கவும், மறுபரிசீலனை செய்யவும், மறுசீரமைக்கவும் விரிவான பரிந்துரைகளை குழு முன்மொழிந்தது.

About Matribhumi Samachar

Check Also

ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின் தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு …