Monday, December 08 2025 | 05:29:24 PM
Breaking News

அவசரநிலைக் காலத்தின் போது அரசியல் சாசன முகவுரையில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டன – முகவுரை அரசியலமைப்பின் ஆன்மா, அதில் மாற்றம் செய்யாமல் மதிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Connect us on:

கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான திரு டி.எஸ். வீரய்யா தொகுத்த ‘அம்பேத்கரின் செய்திகள்’ என்ற நூலை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று (28.06.2025) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு அரசியலமைப்பின் முகவுரையும் அதன் ஆன்மா எனவும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தனித்துவமானது என்றும் கூறினார். பாரதத்தைத் தவிர வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையும் மாற்றத்திற்கு உள்ளாகவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.  முகவுரை மாற்ற முடியாதது எனவும் அரசியலமைப்பு வளர்ந்ததற்கான அடிப்படையே முகவுரைதான் என்றும் அவர் கூறினார்.

 ஆனால் பாரதத்திற்கான இந்த முகவுரை 1976-ம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தால் மாற்றப்பட்டது எனவும் இதில் சோசலிச, மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலகட்டமான அவசரநிலையின் போது, ​​மக்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபோது, ​​அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

டாக்டர் அம்பேத்கர் மிகவும் கடினமான பணிகளைச் செய்தார் எனவும் அவர் நிச்சயமாக அதில் கவனம் செலுத்தியிருப்பார் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். அந்த முன்னுரையை நமக்கு மிகவும் புத்திசாலித்தனத்துடன் அதை உருவாக்கியவர்கள் நமக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார். 1975 ஜூன் 25 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட 22 மாத கடுமையான அவசரநிலையின்போது அரசியலமைப்பின் ஆன்மா மாற்றப்பட்டதாக அவர் கூறினார். அவசரநிலையின் போது முகவுரையில் சில வார்த்தைகளைச் சேர்ப்பது அரசியலமைப்பை உருவாக்கியவர்களைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர வேறில்லை என்று அவர் தெரிவித்தார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நம் இதயங்களில் வாழ்கிறார் எனவும் அவர் நம் மனதில் ஆதிக்கம் செலுத்தி நம் ஆன்மாவைத் தொடுகிறார் என்றும் அம்பேத்கரின் செய்திகள் நமக்கு தற்காலத்திலும் பொருந்துகின்றன என்றும்  குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். அரசியலமைப்பின் ஆன்மாவான அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்ட முகவுரை மாற்றியமைக்கப்படுவதற்கு பதிலாக மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியா முன்பு ஒரு முறை தனது சுதந்திரத்தை இழந்தது மட்டுமல்லாமல், அதன் சொந்த மக்களில் சிலரின் துரோகத்தாலும் பாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.   நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக ஆபத்தில் சிக்க கூடாது எனவும் நமது சுதந்திரத்தைப் பாதுகாக்க நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”