சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வாகன ஆயுள் காலத்தை வாகனங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலாண்மைக்காக, 2025 ஜனவரி 06, தேதியிட்ட சுற்றறிக்கை 98(E)-ன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (வாகன ஆயுள் காலம்) விதிகள், 2025 ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இதில் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகனங்களை ஆயுள் காலம் முடிவடைந்த பிறகு அகற்றுவதற்கான கட்டாய நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விதிகள் வேளாண்மை டிராக்டர், வேளாண்மை டிரெய்லர், கூட்டு அறுவடை இயந்திரம், பவர் டில்லர் தவிர, அனைத்து வகையான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களையும் உள்ளடக்கியதாகும்.
இந்த விதிகளின் கீழ், உற்பத்தியாளர்கள் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்திய அல்லது அறிமுகப்படுத்தும்வாகனங்களுக்கான நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின் கடமையை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். வாகனங்களை கழிவாக அகற்றும் இலக்குகளை உறுதி செய்யும் பொருட்டு சொந்த பயன்பாட்டிற்காக விற்கப்பட்ட வாகனங்கள் உட்பட. 2025-26-ம் ஆண்டு முதல், போக்குவரத்து வாகனங்கள் என்றால் 15 ஆண்டுகளுக்கு முன்பும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பும் சந்தையில் விற்கப்பட்ட வாகனங்களை உற்பத்தியாளர்கள் அகற்றவேண்டும்.
பதிவுசெய்யப்பட்ட வாகன கழிவு முறைகளின்படி தகுதியற்ற வாகனங்கள் அல்லது ஆயுள் காலம் முடிவடைந்த வாகனங்கள் கழிவு செய்வதற்காகப் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பழுதுபார்த்தல், மாசு நீக்கம், பிரித்தல், கழிவுநீக்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட வாகன கழிவு முறைகளின்படி மறுசுழற்சி அல்லது புதுப்பித்தல் வசதியைக் கொண்டிருந்தால், ஆயுள் காலம் முடிவடைந்த வாகனங்களிலிருந்து மீட்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் பதிவுசெய்யப்பட்ட மறுசுழற்சி செய்பவர்கள் அல்லது புதுப்பித்தவர்கள், பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கும் மீண்டும் பயன்படுத்துவதற்கும் இணை செயலிகளுக்கு அனுப்ப வேண்டும். மறுசுழற்சி செய்ய முடியாத அல்லது புதுப்பிக்க முடியாத அனைத்து பொருட்களையும் பயன்படுத்த முடியாத பொருட்களையும் அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை தாண்டிய இயக்கம்) விதிகள், 2016-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான அபாயகரமான கழிவு சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் ஆலைக்கு அனுப்ப வேண்டும்.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

