Friday, January 02 2026 | 02:58:51 PM
Breaking News

ஏழு ஆண்டுகளில் ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீட்டில் “முக்கிய கனிமங்களுக்கான தேசிய இயக்கத்திற்கு” மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Connect us on:

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16,300 கோடி ரூபாய் செலவிலும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.18,000 கோடி முதலீட்டுடனும் “முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை”த் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும், உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய  தொழில்கள், தூய எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள தாதுக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் அத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.

கனிமவளத் துறையில் தற்சார்பு அடைவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2024-25-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான தேசிய இயக்கம் அமைப்பதாக நிதியமைச்சர் 2024  ஜூலை 23 அன்று அறிவித்து இருந்தார்.

மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட  முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான தேசிய இயக்கம், கனிம ஆய்வு, தாதுக்களுக்கான சுரங்கம், சுத்திகரிப்பு, பதப்படுத்துதல், ஆயுட்காலம் முடிந்த பொருட்களிலிருந்து மீட்பு உள்ளிட்ட மதிப்பு சங்கிலியின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த இயக்கம் உள்நாட்டிலும்,  கடல் பகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள ஆதாரம் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்தும்.  கனிமவள சுரங்கத் திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல் வழங்கும் செயல்முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும். கூடுதலாக, இந்த இயக்கம் முக்கியமான கனிமவள ஆய்வுக்குத் தேவையான நிதிசார் ஊக்கத்தொகைகளை வழங்க வகை செய்கிறது.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …