Monday, September 07 2026 | 06:25:17 PM
Breaking News

சுகாதார – தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது: இ.டி. மருத்துவர்கள் தின மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Connect us on:

எக்கனாமிக் டைம்ஸ் (இ.டி.) டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த மருத்துவர் தின மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முக்கிய உரையாற்றினார். திரு ஜிதேந்திர சிங் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரும் மருத்துவ பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக  உள்ளது என நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.  பொருளாதாரத்தில் உலக அளவில் 10-வது இடத்திலிருந்து 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது எனவும் இந்த ஏற்றம் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணம், உள்நாட்டு உயிரி அறிவியல் கருவிகளை சுமந்து சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார். விரைவில் ஒரு புதிய மருத்துவத் துறையான விண்வெளி மருத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரு மைல்கல் இது என்று அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில், மருத்துவக் கல்வியில் விண்வெளி மருத்துவர்கள் என்ற ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாகலாம் எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்தியாவில் 70% க்கும் அதிகமானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றாலும், வயதான மக்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகின்றது என அவர் தெரிவித்தார். 1947-ம் ஆண்டில், சராசரி ஆயுட்காலம் 50-55 வயதாக இருந்தது எனவும் இப்போது அது 80-ஐ நெருங்குகிறது எனவும் அவர் கூறினார். இந்தியாவின் சமீபத்திய உலகளாவிய சாதனைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நோய்த் தடுப்பு மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கோவிட்-19-க்கான உலகின் முதல் மரபணு தடுப்பூசியையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஹெச்பிவி தடுப்பூசியையும் இந்தியா உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஹீமோபிலியாவிற்கான முதல் மரபணு சிகிச்சை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது எனவும் இதன் முடிவுகள் மதிப்புமிக்க நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தனியார் துறையுடனான முதல் கட்ட ஒத்துழைப்பே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார். பொது மற்றும் தனியார் துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாக இந்த சாதனைகள் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அறிவியல் மற்றும் மருத்துவத்தின் ஆன்மா இரண்டையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …