Wednesday, September 16 2026 | 01:32:35 PM
Breaking News

இஸ்ரோ செலுத்திய 100-வது ராக்கெட் இந்திய விண்வெளி பயணத்தின் மிகப்பெரிய சாதனையாகும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Connect us on:

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “ஜி.எஸ்.எல்.வி-எஃப் 15 / என்.வி.எஸ் -02 மிஷன் செலுத்தப்பட்டது மற்றொரு மைல்கல் மட்டுமல்லாமல், 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மிகப்பெரிய சாதனையைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரோவால் பதிவு செய்யப்பட்ட அசாதாரண சாதனைகளால் உலகமே வியக்கும் இதுபோன்ற முக்கியமான தருணத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்திருப்பது தனக்கு கிடைத்த பெருமை என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இஸ்ரோவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.யின் 100 வது ராக்கெட் செலுத்தப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.

1969-ம் ஆண்டில் இஸ்ரோ நிறுவப்பட்ட நிலையில்,  1993-ம் ஆண்டு முதல் ஏவுதளத்தை அமைக்க 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இரண்டாவது ஏவுதளம் இன்னும் பத்தாண்டுகள் கழித்து 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. என்றாலும் கூட கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் விண்வெளித் துறை, உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது முன்னெப்போதும் இல்லாத விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது விண்வெளித் துறையில் ஒரு பெரிய சாதனையைக் குறிப்பதாகவும், இது கடந்த அறுபது ஆண்டுகளில் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.  தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டாவைத் தாண்டி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு விரைவாக அதிகரித்து வருவதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …