Monday, January 12 2026 | 04:19:49 PM
Breaking News

மகாத்மாவின் பயணம்: அவரின் சொந்த ஆவணங்களிலிருந்து

Connect us on:

தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இந்திய தேசிய ஆவணக்காப்பகமும்  தேசிய காந்தி அருங்காட்சியகமும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் மற்றும் பிரசார் பாரதி ஆவணக்காப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து “மகாத்மாவின் பயணம்: அவரின் சொந்த ஆவணங்களில் இருந்து” என்ற தலைப்பில் சிறப்புக் கண்காட்சியை அறிவித்துள்ளன. மகாத்மா காந்தியின் பேத்தியும், தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவருமான திருமதி தாரா காந்தி பட்டாச்சார்ஜி  2025,  ஜனவரி 30 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு புதுதில்லி ராஜ்காட்டில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் கண்காட்சி அரங்கில் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.

கவனமாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது மகாத்மா காந்தியின் மாறுபட்ட பயணத்தைக் கண்டறிந்து, பார்வையாளர்களுக்கு தேசத் தந்தையின் வாழ்க்கை மற்றும் ஆளுமையை ஆராய தனித்துவமான வாய்ப்பை வழங்கும். அரிய புகைப்படங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ காட்சிகள், தனிப்பட்ட கடிதங்கள் ஆகியவற்றின் கலவையாக இந்தக் கண்காட்சி இருக்கும். போர்பந்தரில் காந்தியின் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் அவரது முக்கிய பங்கு வரையிலான பாதையின் தெளிவான சித்தரிப்பை இந்தக் கண்காட்சி வழங்கும்.

மகாத்மாவின் வாழ்க்கைப் பயணம், இங்கிலாந்தில் அவரது கல்வி, தென்னாப்பிரிக்காவில் அவரது ஆரம்ப ஆண்டுகள், சம்ப்பராண் சத்தியாகிரகம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய மைல்கற்களில் அவரது தலைமை போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் காட்டும் 30 பதாகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெறும். சமூக நீதி, வகுப்பு நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றிற்கான அவரது பணிகளையும், பிரிவினையின் போது அமைதியை நிலைநாட்டுவதற்கான அவரது முயற்சிகளையும்,  சுதந்திரத்திற்குப் பின் அவரது நீடித்த ஆளுமையையும் எடுத்துக்காட்டுவதாக இது இருக்கும்.

இந்தக் கண்காட்சி காந்தியின் அகிம்சை, நீதி மற்றும் அமைதி பற்றிய தத்துவத்தைப் படம்பிடிக்கும் காப்பகப் பொருட்களின் வளமான தொகுப்பை ஒன்றிணைக்கிறது. கண்காட்சி குறிப்பிட்ட காலத்திற்கு பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது வாழ்க்கை மற்றும் ஆளுமை குறித்த ஆழமான புரிதலைப் பெறவும் அனைத்து குடிமக்கள், மாணவர்கள், வரலாற்றாசிரியர்கள், காந்தி ஆர்வலர்கள் கண்காட்சிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

About Matribhumi Samachar

Check Also

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு …