இந்திய தேர்தல் ஆணையம் 4.96 கோடி வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட 2003 பீகார் வாக்காளர் பட்டியலை, தேர்தல் ஆணைய இணையதளமான https://voters.eci.gov.in இல் பதிவேற்றம் செய்துள்ளது.
2025 ஜூன் 24 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, 01.01.2003 தேதியை தகுதித் தேதியாக கொண்ட வாக்காளர் பட்டியலை, அனைத்து வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு அச்சிடப்பட்ட நகலிலும், அவர்களின் இணையதளத்தில் ஆன்லைனிலும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பதிவு அதிகாரி ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிப்போர் அதை ஆவணச் சான்றாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு திருத்தம், பீகாரில் 2003-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல்கள் எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கு வழிவகுக்கும். இதன்படி, தற்போது மொத்த வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
மேலும், பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத எவரும், தங்கள் தாய் அல்லது தந்தைக்கு வேறு எந்த ஆவணங்களையும் வழங்குவதற்குப் பதிலாக, 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் சான்றை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 இன் பிரிவு 21(2)(a) மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960 இன் விதி 25 இன் படி வாக்காளர் பட்டியலைத் திருத்துவது கட்டாயமாகும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கடந்த 75 ஆண்டுகளாக இந்த திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
தொழில், கல்வி, திருமணம் போன்றவற்றால் இடம்பெயர்வது, இறப்புகள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும்.
Matribhumi Samachar Tamil

