Monday, January 05 2026 | 11:25:50 AM
Breaking News

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தலைமை வகிக்கவுள்ளார்

Connect us on:

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா நாளை (2025 டிசம்பர் 01) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கவுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் கலந்துகொள்வார்கள். இது ஹெச்ஐவி தடுப்பு, சிகிச்சை, பராமரிப்பு ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதலில் மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக அமையும்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில், அரசுப் பிரதிநிதிகள்,  இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். உலக அளவில் பொது சுகாதார அச்சுறுத்தலாக விளங்கும் எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவர ஒருங்கிணைந்த அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது.

விழிப்புணர்வு, பொறுப்பான செயல்பாடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சார்பில் கருப்பொருள் கண்காட்சியும் இடம்பெறும்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், எய்ட்ஸ் தடுப்பில் இந்தியா தொடர்ந்து கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. 2010-ம் ஆண்டுக்கும் 2024-ம் ஆண்டுக்கும் இடையில், இந்தியாவில் ஆண்டுதோறும் புதிய ஹெச்ஐவி தொற்று பாதிப்புகள் 48.7% குறைந்துள்ளது.  எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் 81.4% குறைந்துள்ளன.

உலகளாவிய சராசரியை விஞ்சி, இந்தியா சிறப்பாக செயல்படுவதை இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

About Matribhumi Samachar

Check Also

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு …