வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் கட்டுப்பாட்டு அலுவலராக 2025 நவம்பர் 28 அன்று பொறுப்பேற்றார். பணி ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதனிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
1987-ம் ஆண்டு கடற்படையில் இணைந்த திரு சஞ்சய் சாது, இயந்திர பொறியியலில் முதுகலை பட்டமும், பாதுகாப்பு உத்தி தொடர்பாக எம்ஃபில் பட்டமும் பெற்றவர். 38 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை அனுபவத்தில், கொடி அதிகாரி பல முக்கிய பிரிவுகளின் செயல்பாடு உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டில், போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா, ஐஎன்எஸ் துனகிரி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
கொடி அதிகாரியாக அவர் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, அவர் மும்பை கடற்படை கப்பல் உற்பத்தி பிரிவில் கூடுதல் பொது மேலாளர், கார்வார் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் பிரிவின் கண்காணிப்பாளர், புதுதில்லி கடற்படை தலைமையகத்தில் கடல்சார் பொறியியல் முதன்மை இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
கொடி அதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர், அவர் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவின் கூடுதல் இயக்குநர் தலைவர், கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, விசாகப்பட்டினம் கப்பல்கட்டும் தளத்தின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மேற்கு, கிழக்கு கடற்படை பிரிவுகளில் உள்ள இரண்டு முக்கிய கப்பல் கட்டும் தளங்களுக்குத் தலைமை வகித்த பெருமையும், மேற்கு, கிழக்கு கடற்படை கட்டளைகளின் தலைமை தொழில்நுட்பப் பணி அதிகாரியாக பணியாற்றிய பெருமையும் கொடி அதிகாரிக்கு உண்டு.
இவர் கோவாவின் கடற்படைப் போர் கல்லூரியின் முன்னாள் மாணவர். பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் சேவை செய்ததற்காக, குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், நௌசேனா பதக்கம் ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.
Matribhumi Samachar Tamil

