Friday, December 05 2025 | 05:19:57 PM
Breaking News

மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Connect us on:

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.11.2025) மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் படங்களுடன் சமூக வலைதளத்தில் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தனித்தனி பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“நவம்பர் மாதம் பல உத்வேகங்களைக் கொண்டு வந்துள்ளது”

“உணவு தானிய உற்பத்தியில் இந்தியா ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.”

“புனேவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, இஸ்ரோ ஏற்பாடு செய்த தனித்துவமான ட்ரோன் போட்டியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை பிரதமர் திரு நரேந்திர எடுத்துரைத்தார்.”

“இந்தியா முழுவதும் ஒரு இனிமையான புரட்சி!”

“ஐரோப்பாவிலிருந்து சவுதி அரேபியா வரை, உலகம் கீதையை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதைப் பிரதமர் திரு நரேந்திர பகிர்ந்து கொண்டார்.”

” ஜாம் சாஹேப்பின் உலகம் போற்றும் அரிய பங்களிப்புகள்…”

“உயர்ந்த கல்வித் தகுதி பெற்ற இளம் நிபுணர்கள் இப்போது இயற்கை விவசாயத்தை ஏற்று செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்”

“நான்காவது காசி-தமிழ் சங்கமம் டிசம்பர் 2-ம் தேதி காசியில் உள்ள நமோ படித்துறையில் தொடங்குகிறது. காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்”

“ஐஎன்எஸ் மஹே இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் உள்நாட்டு வடிவமைப்பு பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.”

“உத்தராகண்டில் குளிர்கால சுற்றுலா பலரை ஈர்க்கிறது.”

“பகவான் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் மீது பல நாடுகளில் உற்சாகம் காணப்படுகிறது. உலகம் முழுவதற்கும், புத்தரின் நினைவுச்சின்னங்களை அனுப்பியதற்காக அந்நாடுகளின் மக்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.”

“உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்!”

“விளையாட்டுகளில் இந்தியா அதிகம் சாதித்த மாதம்!”

“நவம்பர் மாத்ததில் 140 கோடி இந்தியர்களும் பெருமிதம் கொள்ளும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் சில:

அயோத்தியில் தர்ம த்வஜாரோஹண விழா.

பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழா.

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா.

இந்தியா உலகளாவிய கப்பல் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையமாக மாறும் நிலையை நெருங்கியது.

வலிமை மற்றும் தன்னம்பிக்கையின் துடிப்பான அடையாளமான ஐஎன்எஸ் மாஹே செயல்பாட்டுக்கு வந்தது.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இன்ஃபினிட்டி வளாகத்தின் திறப்பு விழா.

உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.”

“இந்தியாவின் இளைய தலைமுறையினர் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் அற்புதங்களைச் செய்து வருகின்றனர். ட்ரோன்கள் மீதான நமது இளைஞர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி இது.”

“ஜம்மு காஷ்மீர் முதல் கர்நாடகா, நாகாலாந்து வரை, இந்தியாவின் விவசாயிகள் தேன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து வருகின்றனர். இந்தத் துறையில் காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.”

“சவுதி அரேபியா மற்றும் லாட்வியாவில் கீதை மஹோத்சவங்கள் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும். அவை இந்திய புலம்பெயர்ந்தோரிடம் கலாச்சார தொடர்பை ஆழப்படுத்துகின்றன.”

“ஜாம் சாஹேப் திக் விஜய் சிங்ஜியின் மனிதாபிமான மனப்பான்மைக்காக அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இஸ்ரேலில் ஒரு சிறப்பு நிகழ்வு பற்றிப் பேசினேன்.”

“காசி தமிழ் சங்கமத்தை நடத்த காசி காத்திருக்கிறது!”

“வாருங்கள், இந்தியாவில் திருமண நிகழ்வுகளை நடத்துங்கள்!”

“இந்தியாவின் புத்த மத நினைவுச்சின்னங்கள் பூட்டான், தாய்லாந்து, ரஷ்யா, மங்கோலியா உள்ளிட்ட பல நாடுகளில் மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. புத்தரின் எண்ணங்கள் நம்மை எவ்வாறு இணைத்து ஊக்குவிக்கின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது”

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …