2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 2026 ஜனவரி 15 – ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள மாநகராட்சி பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வு, குரூப் II, தாள் – 5, தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத்திற்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
மேற்கண்ட பாடத்திற்கான தேர்வு, 2026 ஜனவரி 19 – ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை [இந்திய நேரப்படி] மற்றும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த அதே தேர்வு மையங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தேர்வு மையத்திற்கான அனுமதிச் சீட்டுகள் மாற்றியமைக்கப்பட்ட தேர்வுத் தேதியான 2026 ஜனவரி 19 – ம் தேதி (திங்கட்கிழமை) அன்றும் செல்லத்தக்கவையாகும்.
இருப்பினும், மேற்கண்ட மாற்றத்தைத் தவிர, இதர தேர்வுகளின் அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதும் தெளிவுபடுத்தபட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டய கணக்காளர் கல்வி நிறுவனத்தின் www.icai.org என்ற இணையத்தில் இது தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Matribhumi Samachar Tamil

