Saturday, January 10 2026 | 03:00:43 PM
Breaking News

பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்

Connect us on:

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுமத்தின் கூட்டத்தில், பாதுகாப்புப் படைகளின் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29, 2025 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுகளுக்கான லாய்ட்டர் வெடிமருந்து அமைப்பு, குறைந்த உயர இலகுரக ரேடார்கள், பினாகா  ராக்கெட் லாஞ்சர் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து தாக்கும் அமைப்பு போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

லாய்ட்டர் வெடிமருந்துகள் முக்கிய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப் பயன்படுத்தப்படும். அதே சமயம் குறைந்த உயர இலகுரக ரேடார்கள், சிறிய அளவிலான, குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களைக் கண்டறிந்து அதனைக் கண்காணிக்கும். நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் ராக்கெட்டுகள், அதிக தொலைவில் உள்ள இலக்குகளை திறம்படத் தாக்குவதற்கான பினாகா ரக ராக்கெட் அதன்  துல்லியத்தையும் மேம்படுத்தும். மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து அழிக்கும் அமைப்பு, உத்திசார் போர் பகுதி மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவத்தின் முக்கிய சொத்துக்களைப் பாதுகாக்கும்.

இந்திய கடற்படைக்காக, போலார்ட் புல் இழுவைப் படகுகள், உயர் அதிர்வெண் மென்பொருள் கொண்ட ரேடியோக்கள், மேன்பேக் மற்றும்  நீண்ட தொலைவிலிருந்து இயக்கப்படும் விமான அமைப்பு ஆகியவற்றை குத்தகைக்கு எடுப்பதற்கான ‘தேவை அடிப்படையிலான ஒப்புதல்’ வழங்கப்பட்டது.

இந்திய விமானப்படைக்காக, தானியங்கி பதிவு அமைப்பு, அஸ்ட்ரா மார்க் – II ஏவுகணைகள், சிமுலேட்டர் மற்றும் நீண்ட தூர வழிகாட்டுதல் கருவிகள் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …