Wednesday, January 07 2026 | 03:32:39 AM
Breaking News

நாடு தழுவிய வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை: அனைத்து வட்டங்களிலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது

Connect us on:

இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்,  நாடு தழுவிய அளவில் வைஃபை  அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகம் செய்துள்ளது.  இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யம்.

வைஃபை  நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்குக் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.

வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசிகளில் வைஃபை காலிங் என்பதை மட்டும் செட்டிங்ஸ் அமைப்பில்  இயக்க வேண்டும். வாடிக்கையாளர்கள்  சாதன இணக்கத்தன்மை மற்றும் உதவிக்கு, அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு செல்லலாம் அல்லது 18001503 என்ற பிஎஸ்என்எல் உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …