இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மண்டல மாநாடு 2026 ஜனவரி 6 அன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மூலம் பொருளாதார வளர்ச்சி, புதுமை, உள்ளடக்கிய வளர்ச்சி போன்றவை குறித்து விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டில் மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். இதில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, ராஜஸ்தான் அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ராஜஸ்தான் மண்டல மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். மேலும் மாநிலத்தின் செயற்கை நுண்ணறவுச் சூழல் அமைப்பை வலுப்படுத்துதல், புதுமைகளை வளர்ப்பது, முன்னுரிமைத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வது ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
Matribhumi Samachar Tamil

