Friday, January 10 2025 | 10:50:17 AM
Breaking News

எட்டு முக்கிய தொழில் பிரிவுகளில் நிலக்கரித் துறை நவம்பர் 2024-ல் 7.5% வளர்ச்சியை அடைந்தது

Connect us on:

வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (ICI – அடிப்படை ஆண்டு 2011-12), எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை நவம்பர் 2023-ல் 185.7 புள்ளிகளுடன் இருந்தது. அதை ஒப்பிடுகையில் நவம்பர் 2024-ல், 199.6 புள்ளிகளுடன் 7.5% (தற்காலிக புள்ளி விவரம்)  குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 162.5 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஏப்ரல்-நவம்பர் 2024 காலகட்டத்தில் நிலக்கரி தொழில்துறை குறியீடு 172.9 புள்ளிகளை எட்டியுள்ளது. இது அனைத்து எட்டு முக்கிய தொழில்களிலும் 6.4% அதிகபட்ச வளர்ச்சியைக் காட்டுகிறது.

சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த செயல்திறனையும் தனிப்பட்ட செயல்திறனையும் ஐசிஐ அளவிடுகிறது.

எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது நவம்பர் 2024-ல் குறிப்பிடத்தக்க 4.3% அதிகரிப்பைக் கொண்டுள்ளது. ஏப்ரல்-நவம்பர் 2024 காலத்திற்கான குறியீடு 2023-24 நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 4.2% அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கு நிலக்கரி துறையின் கணிசமான பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது.

இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள உந்து சக்தி, ஏப்ரல்-நவம்பர் 2024 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு காரணமாகும். இந்தக் காலைட்டத்தில் உற்பத்தி 628.4 மில்லியன் டன்களை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 6.4% குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது. உற்பத்தியில் இந்த அதிகரிப்பு எரிசக்தி உற்பத்தித் தொழில் துறையின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு, நிலக்கரித் துறையின் முக்கியத் திறனை எடுத்துக் காட்டுகிறது.

About Matribhumi Samachar

Check Also

நிதித்துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளராக இன்று பொறுப்பேற்றார்

தற்போதைய நிதித்துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே, நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் செயலாளராக இன்று பொறுப்பேற்றார். அமைச்சரவையின் நியமனக் …